Glimpses – Benediction and Foreword – in Tamil

Here is the downloadable file with some pictures –

Glimpses Tamil — benediction. foreword etc.

ஆசியுரை

 பூஜனீய யோகி ராம்சுரத்குமார்  அவர்களுடைய  பிறந்தநாள் விழா அவரது அனைத்து பக்தர்களும் கொண்டாடும் வேளையில்,  அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அருணாச்சல மலையின் இந்த யோகி மற்றும் மெய்ஞானியின் அரிய தரிசனங்களை வழங்கும் பேராசிரியர் ரங்கராஜனின் இந்த நூல் அனைவராலும் ஆர்வத்துடன் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும், ஏனென்றால், விளம்பரத்தை விரும்பாமல் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைந்து வாழும் இந்த ஆன்மீக பெருந்தகையைப் பற்றி, உண்மையான ஆன்மீகத்தேடல் உடையவர்கள் அறிந்துகொள்ளுவதற்கான வாய்ப்பினை இது ஏற்படுத்தும். இந்த தன்னிகரற்ற ப்ரஹ்ம ஞானியை சந்தித்தது குறித்தும், அவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் குறித்தும், வெளிப்படையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பேராசிரியர் ரங்கராஜன் விவரித்துள்ளது பலபேருக்கு உத்வேகம் வழங்கும் . இந்த நூல் பரவலாக பலபேருக்கு போய்ச் சேரட்டும்.

பக்தர்களுடன் இணைந்து நானும் யோகி ராம்சுரத்குமாரை வாழ்த்துகிறேன்.

ஹரி ஓம்!

ரிஷிகேஷ்                                                                                                        சுவாமி சிதானந்தா

23-11-1987

 

முன்னுரை

 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள்— பகவான் யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டுவிழா நினைவு பதிப்புசாது பேராசிரியர் வே . ரங்கராஜனின், யோகி ராம்சுரத்குமார் அவர்களுடனான முப்பது ஆண்டுகால ஆத்மார்த்தமான இடைவினைகளின் காலக்கிரமமாகத்தொகுக்கப் பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகளின் தொகுப்பாகும். அது அளவிலும் சரித்திரபரமான விவரங்களிலும் ஒரு கலைக்களஞ்சியம் ஆகும்.

 

ஆன்மீக நாட்டம் கொண்ட ஆத்மாக்களுக்கு  யோகி ராம்சுரத்குமார் அவர்கள் தனது தந்தையை அடைய வழிகாட்டி வந்தார். மகா சமாதி ஆனபிறகும் இப்பொழுதும் அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார் அந்த பிச்சைக்காரன் மகான் தனிநபர்களை தனது தந்தையின் பணிக்கான சிறந்த கருவிகளாக மாற்றுவது தான் தனது பணி என்று துணிவுடன்  உறுதியாக கூறி வந்தார்.  அவர் ஆற்றிய அந்த மற்றும் செயல்முறையின் வழித்தடங்களை இந்த தன்னிகரற்ற வரலாற்று களஞ்சியத்தின் பக்கங்களில் காண்கிறோம் .

 

வாழ்நாள் முழுவதும் ஹிந்துப் பண்பாட்டின் இலக்கிய வரலாற்று ஆசிரியராக வாழ்ந்து உள்ள இந்த நூலின் ஆசிரியர், இந்தப் பணியை செய்ய மிகவும் தகுதியுடையவர் அவர். சமஸ்க்ரிதத்திலும் தமிழிலும் உள்ள புராதன நூல்களை ஆழ்ந்து கற்றறிந்துள்ள இவர் அவைகள் போதிக்கும் பாடங்களை உயிருடன் நவீன வாசகர்கள் முன் கொண்டுவந்து நிறுத்த ஆற்றல் படைத்த ஒருசில அரிய நபர்களில் ஒருவர் ஆவர்.

 

1970-ஆம் ஆண்டுகளின் வசந்த காலத்தில் நான் அவரை முதல்முறையாக சந்தித்தபொழுது, அவர் திருவண்ணாமலையின் தெரு க்களில் ஒரு “மறைந்த ஞானி”யாக,  பலபேர் கண்ணுக்கு நன்கு புலப்படுபவராக இருந்தாலும் யாராலும் அடையாளம் கண்டுகொள்ள  முடியாத, எல்லாராலும் ஒரு பைத்தியக்கார பிச்சைக்காரனாக தவறாக எண்ணும்படி , வாழ்ந்து வந்தார்

 

இந்தியாவின் அரசியல் பதட்டங்கள் ஒரு கொதிநிலைக்கு வந்துகொண்டிருந்தன. வட இந்தியாவின் ஹிந்தி பேசும் மற்றும் தென்னிந்தியாவின் தமிழ் பேசும் பிரிவினரிடையே கருத்தியல் துருவமுனைப்பு, தெருக்களில் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது.  யோகி ராம்சுரத்குமார் போன்ற வட இந்தியாவில் பிறந்த ஹிந்தி  பேசும் ‘வடநாட்டவர்’,  தான் யார் என்று அறியப்படுத்தாமல் மறைந்து வாழ்வது ஆபத்தானது.

 

அவருக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்ததால் , அந்த பிச்சைக்கார மஹாத்மா அவரது ஒரு சிறிய வாழ்க்கை வரலாறை எழுதுமாறு 1971-ல்  என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரைப்பற்றி தெரிந்த தகவல்கள் மிக குறைவாக இருந்ததால் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதுவது என்பது ஓர் சவாலாக இருந்த்தது.

 

ஆனால் காலப்போக்கில் அந்த சிறிய நூல் அதனுடைய பணியை செய்தது. யாருக்கும் தெரியாமல் வாழ்ந்த அந்த யோகியின் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது நம்பிக்கையுடையோர்களை அவருக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளிக்க அவரிடம் கொண்டுவர செய்தது . அவருக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களும்  அசச்சுறுத்தல்களும் நின்றன. அதே நேரம் உள்ளூர்மக்களுடன் யோகியின் உறவை ஒரு பொது அரங்கிற்கு கொண்டுவந்த்தது.

 

நானும் பேராசிரியர் வே. ரங்கராஜனும் முன்னர் கடிதத் தொடர்பில் இருந்தோம் எனினும், 1993-ன் பிற்பகுதியில் தான் யோகி ராம்சுரத்குமார் அவரது சன்னிதி தெரு வீட்டின் திண்ணையில் எங்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் நேரடியாக அறிமுகப்படுத்திவைத்தார். நான் அவரது வாழ்க்கை வரலாறை எழுதி இருப்பது ஆண்டுகள் கழிந்திருந்தன. தற்பொழுது பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன .யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் கட்டுவதற்கான திட்டம் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, அது விரைவில் உருவாக இருந்தது. பரமானந்த நிலையில் வாழ்ந்துவந்த அந்த மஹானை பொது அரங்கில் கொண்டுவருவதற்கான பணிகள் வேகமாக வளர்ந்துகொண்டிருந்தன. அன்றைய தினம் பகவான் எனக்கு அறிமுகப்படுத்திவைத்த நபர் பகவானின் மிகுந்த பேராவல்மிக்க  பணிகளை விரைவில் முன்னின்று நடத்துவார் என்பது அந்த நேரத்தில் எனக்கு தெரியவவில்லை .

 

கடந்த 20 ஆண்டுகளில் பகவான் கனிவுடன் எண்ணற்றவர்களுக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் பொறுப்பை மேற்கொண்டார். வெளித்தோற்றத்திற்கு அவரது குறிக்கோள் சாதகர்களுக்கு போதனைகளும் மாறுதல்களும் வழங்குதல் மட்டுமாகத்  தான் தெரிந்தது. ஆனால் அவரது பணி அதுமட்டுமல்ல என்பதை இந்த நூல் நிரூபிக்கின்றது.

 

யோகி ராம்சுரத்குமார் பல பொழுதும்  தனது பணியின் மற்ற பல  முகங்கள் குறித்து விளக்கியுள்ளார். அவைகளில் மிக முக்கியமானது பாரதத்தின் தனிச்சிறப்பை உலக நாடுகளின் முன் முகத்திரைவிலக்கிக் காட்டுதல், சமய நூல்களில் வேதத்தின் முன்னுரிமையை பேணிப் பாதுகாத்தல், சமஸ்கிருத மொழியின் பயிற்சியை வளர்த்தல்,  குழந்தைகளின்  ஹிந்து சமய கல்வி பேணுதல் மற்றும் சதாசர்வகாலமும் இறைவனின் நாமத்தை  நினைவில் வைத்துக்கொள்ளுவதை ஊக்குவித்தல் ஆகியவை ஆகும்.  .

திரைக்குப் பின்னால், யோகி ராம்சுரத்குமார், தனது உயர்ந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக தனது கட்டளையின் கீழ் உழைக்க, நெருங்கிய சீடர்களை முன்னணி தொண்டர் படையினர்களாக தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். சிலரில் ஒருவர் ஆவர். இந்த நூலில் வெளியிடப்பட்டுள்ள சம்பவங்களின் வரலாற்று குறிப்புகள் அவர் நிலையாக பகவானின் வலம்கையாக இருந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

 

இந்த பெருநூல் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது: முதல் பகுதி பகவானின் விரிவான வாழ்க்கை வரலாறு . இந்த விவரணம் கவிநயம் பொருந்தியதும் உணர்ச்சியூட்டுவதுமாக அமைந்துள்ளது. இந்த விவரணம் கவிநயம் பொருந்தியதும் உணர்ச்சியூட்டுவதுமாக அமைந்துள்ளது. இரண்டாவது பகுதி வரலாற்றுச்சிறப்பு மிக்க அருணாச்சலமலையின் ராமதாஸ் குஹையில் பகவானால் பேராசிரியர் ரங்கராஜனுக்கு மிக அரிதான தீக்ஷை வழங்கப்பட்ட நிகழ்ச்சி விளக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி பல தசகங்களாக இந்த சீடன் பகவானுக்கு ஆற்றிவந்துள்ள சமர்ப்பணம் மிக்க சேவைகளை விவரிக்கிறது. மூன்றாம் பகுதி யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பணியை முன்னெடுப்பதற்காக சாது ரங்கராஜனின் சாதனைகளின் அணிவகுப்பின் மேலும் அணுகலை வெளிப்படுத்துகிறது.

 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள்— பகவான் யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டுவிழா நினைவு பதிப்பு, சாது ரங்கராஜனுக்கு தனது மாபெரும்  குருநாதர் யோகி ராம்சுரத்குமாரிடம்  உள்ள   அசைக்கமுடியாத சிஷ்யத்துவ உணர்வு  குறித்தும்   அவரது திகைக்கவைக்கும் சாதனைகளின் வளமான பட்டியல்    குறித்தும் நேரடிப்பார்வை வழங்குகிறது.

 

டென்வர், கொளோராடோ,  யு. எஸ். ஏ.            ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன்  25-2-2018

 

 

 

 

 

 

 

ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் மற்றும் யோகி ராம்சுரத்குமார் திருவண்ணாமலை பேரூந்துநிலையத்தின்  அஸ்வத்த மரத்தின் கீழ் அமர்ந்துள்ள நிலையில் 1971-ல்

 

 

முதல் பதிப்பிற்கு பதிப்பகத்தாரின் குறிப்பு

 

இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் மெய் ஞானிகளில் ஒருவரான யோகி ராம்சுரத்குமார் மஹராஜ் அவர்களின் ஜெயந்தி வேளையில் இந்த எளிய நூலை வெளிக்கொண்டுவருவதின்மூலம் சகோதரி நிவேதிதா அகாடமி (பாரதீய சிந்தனை மற்றும் பண்பாட்டு நிறுவனம்) தனது வாழ்த்துக்களை அந்த மஹானுக்கு செலுத்துவதில் பெருமை அடைகிறது.

 

இந்த அகாடமி பாரதத்தின் சிறப்புமிக்க ஆன்மீக பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பரப்பும் பணிக்காக அர்பணிக்கப்பட்டுள்ளதாகும். இந்த புனிதமான பாரதத்தின் மிக பெரிய ஆன்மீக புதல்வர்கள் மற்றும் புதல்விகள வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து, நாட்டிற்கு உள்ளேயும் வெளிநாடுகளிலும் உள்ள பாரதப்புதல்வர்களுக்கு போதிப்பதை ஒரு புனிதப்பணியாக நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

 

யோகி அவர்களுடைய அதே ஆன்மீக சகோதரத்துவத்தை சார்ந்தவரும் எங்களுக்கு வழிகாட்டியும் ஒளிவிளக்குமாக திகழ்பவருமான புனித அன்னை, கன்னியாகுமரி மாயம்மாவின், கழலிணைகளில் நாங்கள் சமர்பிக்கின்ற இந்த எளிய காணிக்கை, உலகெங்குமுள்ள ஆன்மீக நாட்டம் கொண்டவர்களின் கவனத்தை ஈர்த்து, திருவண்ணாமலையில் ஒளிரும் தீபத்திடம் நெருங்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

 

சென்னை                                                                 — சகோதரி நிவேதிதா அகாடமி  23-11-1987

 

 

 

 

 

 

 

 

 

 

 

நூற்றாண்டுவிழா நினைவு பதிப்பிற்கு

பதிப்பகத்தாரின் குறிப்பு

 

பாரதமாதா குருகுல ஆஸ்ரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இன்டோலோஜிக்கல் ஆராய்ச்சி மையம், சகோதரி நிவேதிதா அகாடெமியின் புடைசாரிகள், ஆன்மீக உலகத்திற்கு முன் பெருமையுடன் சமர்ப்பிக்கும்  “ஒரு மகா யோகி யின் தரிசனங்கள்” விரிவான நூற்றாண்டு விழா நினைவு தொகுதி, ஆசிரியர் சாது பேராசிரியர் வே. ரங்கராஜன் அவர்களின் தீக்ஷாகுரு, திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார்   அவர்களின் தன்னிகரற்ற, மிகவும் உணர்ச்சியூட்டுகின்ற வாழ்க்கை வரலாறு, அந்த மகானின் நூற்றாண்டு விழா வேளையில் இந்த தொகுதி வெளியிடப்படுகிறது. இந்த நூலின் முதல் பதிப்பு, ரிஷிகேஷை மையமாக கொண்ட டிவைன் லைஃப் சொசைட்டி -யின் ஆன்மீக தலைவர் பூஜ்ய சுவாமி சிதானந்தஜி மஹராஜின் ஆசியுரை உட்பட, 1987-ல் பகவானின் ஜெயந்தி விழாவின்பொழுது, பகவான் யோகி ராம்சுரத்குமார் அவரது திருக்கரங்களாலேயே வெளியிடப்பட்டது.  திருவண்ணாமலையில் 1988 ஏப்ரல் 26 அன்று பப்பா ராமதாஸ் அவர்களின் ஜெயந்தி விழாவின் பொழுது, பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களால் சாதுவிற்கு தீக்ஷை வழங்கப்பட்ட நிகழ்வின் விவரங்கள் உட்கொண்டு இதன் இரண்டாவது பதிப்பும்,1988 குருபூர்ணிமா நன்னாளில் பகவான் திருக்கரங்களாலேயே வெளியிடப்பட்டது. பகவானின் கட்ட்டளைப்படி இந்த நூலின் மூன்றாவது பாதிப்பும் தயாராகி, 1990-ம் ஆண்டு தீபாவளி திருநாளன்று மீண்டும் பகவான் யோகிராம்சுரத்குமார் அவர்களே தனது திருக்கரங்களால் அதை வெளியிட்டார்.

 

சாதுவிற்கு தீக்ஷை வழங்குகின்ற பொழுதும் அதற்குப்பின்னரும் பகவான் மீண்டும் மீண்டும் உறுதிப்படக்கூறியது, இந்த சாதுவின் மூலமாக அவர் தனது தந்தையின் பணியை செய்வார் என்றும் சாது அவரது கருவி மட்டும்தான் என்பதும் ஆகும். தீக்ஷை பெற்ற நாள் முதல் இந்த சாது தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் பகவானின் பணி மட்டும்தான் செய்து வந்துள்ளான்.  பகவானும் திரும்ப திரும்ப தனது நெருங்கிய பக்தர்களிடம் தான் தனது தந்தையின் பணியை சாதுவிடம் ஒப்படைத்துள்ளதாக வெளிப்படையாக கூறிவந்துள்ளார்.  தீக்ஷைக்குப் பிறகு பகவானின் வழிகாட்டுதலின்படி இந்த சாதுவின் ஒவ்வொரு நடவடிக்கை குறித்த தகவலும் பகவானுக்கு அவ்வப்பொழுது சாதுவின் கடிதங்கள் மூலமாகவும் பகவானுடன் நேரடி சந்திப்பு மூலமாகவும் பகவான்  மஹாசமாதி அடையும் காலம்  வரை தெரியப்படுத்தப்பட்டு வந்துள்ளது.  தீக்ஷைக்குப்பின், இரண்டரை ஆண்டு காலம் பல முக்கிய பகதர்களின் முன்னிலையிலும் பகவானுடன் சாது நடத்தியுள்ள உரையாடல்களில், ஆன்மிகம், சமயம், சமூக, அரசியல், தேசிய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து பகவான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மிக கவனமாக சாதுவின் அன்றாட நாள்குறிப்புகளில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. அந்த நாட்குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் சாது பகவானுக்கு அவ்வப்பொழுது அனுப்பியுள்ள அனைத்து கடிதங்கள் தெளிவாக தேதி குறிப்பிட்டு தொகுக்கப்பட்டுள்ள ஒரு பெரும் பொக்கிஷமாகும் இந்த நூற்றாண்டு நினைவு தொகுதி. பகவான் தனது சார்பில் செயல்பட, தனது பிரதம சிஷ்யன் மற்றும் தூதுவனாக சாது ஆற்ற வேண்டிய முக்கிய பொறுப்புகள் சாதுவிற்கு வழங்கியது பற்றிய விவரங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒரு மகா யோகியின் தரிசனங்கள்— பகவான் யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டுவிழா நினைவு பதிப்பு, பகவானின் வாழ்க்கை வரலாறு குறித்த விவரங்கள் அறிந்துகொள்வதற்கு ஒரு மூலமாக மட்டுமல்லாமல் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அமுதமொழிகளின் தொகுப்பாகவும் பகவானின் பக்தர்களின் வருங்கால தலைமுறையினருக்கும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

 

பெங்களூரு                                                   –சகோதரி நிவேதிதா அகாடமி

1-12-2017

 

 

 

 

முதல் பதிப்பின் முகவுரை

 

1984 செப்டம்பர் முதல் நாள் திருவண்ணாமலையில் என்னுடைய நண்பர் ஒருவருடைய கடையில் அமர்ந்து கொண்டு நான் அவரிடம் யோகி ராம்சுரத்குமார் என்பவரை பற்றி விசாரித்தேன். ஒரு நிமிடம் யோசித்து, “நீங்கள் அந்த விசிறி சாமியாரைப் பற்றி கேட்கிறீர்கள் போலிருக்கு” என்று கூறினார். நான் “ஆம், அவரைத்தான் நான் பார்க்க விரும்புகிறேன்,” என்று பதிலளித்தேன்.

 

என்னுடைய நண்பர் சுவாமிகளின் வெகு அருகாமையில் வசிப்பவராக இருந்தபோதும், அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார். இருப்பினும் என்னை அருணாச்சலேஸ்வர் ஆலயத்திற்கு மிக அருகாமையிலிருந்த்த ஸ்வாமிகளின் இல்லத்திற்கு அழைத்துசென்றார். அவர் தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்டு பிறகு என்னையும் அறிமுகப்படுத்தினார். அவருக்கு மிகவும் வியப்பு ஏற்படும் விதத்தில் யோகி கூறினார்: “ஆம். எனக்கு இந்த பேராசிரியரிடம் பலவிஷயங்கள் பேசவேண்டி இருக்கிறது. நீர் அவரை இங்கே விட்டுவிட்டு செல்லலாம்.” எனது நண்பர் ஆச்சரியம் அடைந்தார். என்ன நடக்கிறது என்று அவர் புரிந்துகொள்வதற்கு முன், பிரமைபிடித்த என் நண்பனை வெளியே  விட்டுவிட்டு, யோகி என்னை உள்ளே அழைத்துச் சென்று,  கதவை உள்ளிருந்து தாழிட்டார்.

 

வீட்டிற்கு உள்ளே இருந்த கூடத்திற்கு அவர் என்னை அழைத்து சென்றார். நகரத்தின் குப்பை முழுவதும் கொட்டப்பட்டுள்ள இடம்  போல் அது காட்சியளித்தது. பழைய நூல்கள், செய்தித்தாள்கள், கடிதங்கள், சிகரெட்டு துண்டுகள், எறிந்த நெருப்புக்குச்சிகள் , காலி நெருப்புப்பெட்டிகள் மற்றும் சிகரெட்டுபாக்கெட்டுகள்  எங்கும் சிதறிக்கிடந்தன . தரை பலநாட்களுக்கு பெருக்கித்துடைக்காமல் இருந்திருக்கலாம். சுவர் அருகில் துணியில் சுத்திவைக்கப்பட்ட மூட்டைகள்  தென்பட்டன. பழைய அலூமினியும் பாத்திரங்கள் இருந்தன. சுவர்களில் யோகியின் படங்கள் பல தொங்கிக்கொண்டிருந்தன. வாடி வதங்கிய மாலைகளும் தென்பட்டன. யோகி அமருவதற்கு பயன்படுத்திய கிழிந்த பாயை சுற்றி நாணயங்களும் உயர்ந்தமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் சிதறிக்கிடந்தது  எனக்கு பெரும் வியப்பை அளித்தது. மற்றொரு கிழிந்த பாயில் என்னை அவருக்கு எதிராக அவர் அமரவைத்தார். சிறிதுநேரம் எதுவும் கேட்காமல் என்னையே அவர் உற்றுபார்த்துக்கொண்டிருந்தார். இந்த விசித்திரமான மனிதர் முன் நான் பிரமித்துப்போய் அமர்ந்திருந்தேன். அவர் ஒரு பயித்தியக்கார பிச்சைக்காரனா, மகா ஞானியா அல்லது ஒரு தெய்வப்பிறவியா அன்று திகைத்துப்போயிருந்தேன். அருவருப்பான விதத்தில் காட்சியளித்த அந்த உருவத்தின் முன் என்னையறியாமல் ஒரு சக்தி எனது இதயத்தை  அதனிடத்தில் ஈர்ப்பதுபோல் உணணர்ந்தேன். “இந்த பிச்சைக்காரனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. தயவுசெய்து பொறுத்துக்கொள்ளுங்கள்,’ என்று கூறி அவர் பேச்சை துவக்கினார். ஒரு சிகரெட்டை எடுத்து தன்  உதடுகள் இடையே சொருகி, நெருப்பை பத்தவைத்தார். பின்னர் என்னை நோக்கி வினவினார்: “பேராசிரியரே, இந்த பிச்சைக்காரனிடம் உங்களை வரவழைத்துள்ளது என்ன?” நான் அவரிடம் முதன்முறையாக வந்துள்ள பொழுதும் அவர் என்னை நோக்கி கேள்விகேட்ட விதம் எதோ நீண்டகாலமாக அவர் என்னை அறிந்துள்ளவர்போல் எண்ணத்தோன்றிற்று.

 

“நான் அன்னை மாயியின் பக்தன்” என்று கூறி அமைதியாக இருந் தேன். மனம் குழம்பி இருந்ததால் மேற்கொண்டு பேச முடியவில்லை. யோகி சிகரெட்டை கீழே போட்டுவிட்டு கையில் விசாரியை எடுத்தார். அதை தனது வலது காதின் அருகில் வைத்துக்கொண்டு எனது கண்களை உற்று நோக்கினார். ஒரு மின்சார ஆற்றல் எனது நரம்புகளில் பாய்வதுபோல் உணர்ந்தேன். இந்த உடலிலிருந்து நான் மற்றொரு நிலைக்கு எடுத்து செல்லப்படுவதுபோல் உணர்ந்தேன். பிரகாசமான அவரது கண்களிலிருந்து பாய்ந்த ஒளிக்கதிர்கள் தாக்கத்தை தாங்க இயலாமல் நான் எனக்குள் காயத்ரி மந்திரத்தை உருவிட்டுக்கொண்டிருந்ததை ஒருவேளை அவர் அறிந்திருப்பார். ஒரு புன்சிரிப்புடன் விசிறியை கீழே வைத்துவிட்டு அவர் கூறினார்: “நீங்கள் மருந்து அருந்தவேண்டியதில்லை, ஆனால் தேன் அருந்தலாம். தேன் மருந்து அல்ல!”   நான் திகைத்துப் போனேன். நான் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டு, அன்னையின் அருளாசியின் காரணமாக,  மருந்து ஏதும் அருந்தாமல் அக்நிஹோத்ரம் மூலமாக குணப்படுத்தப்பட்டேன் என்பதை அவர் எப்படி அறிந்தார்? நான் எழுந்து அவர் காலில் விழுந்து வணங்கினேன். மீண்டும் அவர்முன் அமர்ந்து ஆச்சரியம் மற்றும் பிரமிப்புடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னிடம் எனது மூக்குக்கண்ணாடியை கழட்டும்படி அவர் உத்தரவிட்டார்.அதை தனது கையில் எடுத்துக்கொண்டு கவனமாக பார்த்துவிட்டு கூறினார்: “இந்த கண்ணாடியை மாற்றவேண்டிய நேரம் அல்லவா இது ?” அது சாதாரண கேள்வியல்ல. அதன் உள்ளர்த்தத்தை உடனடியாக புரிந்துகொண்டேன். நான் பதிலுரைத்தேன்: “ஆம், மஹராஜ், அதற்கான நேரம்தான்.” தீவிரமான ஆன்மீக வேட்கையால் உந்தப்பட்டு நான் கடந்து வந்த நீண்ட பாதையைக்குறித்து அவருக்கு விளக்கினேன். சகோதரி நிவேதிதா அகாடமி 1984 பிப்ரவரியில் துவங்கியதும் அன்னை மாயிக்கு அர்பணமானதுமான ‘தத்துவதர்சனா’ காலாண்டிதழின் முதல் மூன்று இதழ்களை அவரிடம் வழங்கினேன். குருநாதர் பொறுமையாகவும் ஆர்வமாகவும்  அந்த இதழ்களின் பக்கங்களை புரட்டிப்பார்த்தார்.  ஆரம்ப இதழின் ஒரு பக்கத்தை சுட்டிக்காட்டி அதை படிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை அவரிடமிருந்து வாங்கி நான் வாசிக்க ஆரம்பித்தேன்: “முதல் அதிமானஸ வெளிப்பாடு, பிப்ரவரி 29, 1956, புதன்கிழமை, ஸ்ரீ அரவிந்த ஆஸ்ரமம் , பாண்டிச்சேரி …” அவர் அந்த பக்கத்தை மூன்றுமுறை வாசிக்கச்சொன்னார். பின்னர் அவர் வினவினார்: “முதல் அதிமானஸ வெளிப்பாடு 1956-ல் தான் நிகழ்ன்ததா?” நான் அசந்துபோனேன் . யோகி உரக்கசிரித்தார்.

 

ஆன்மீக விஷயங்களைக் குறித்து நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் பல மணி நேரங்கள் கடந்தன. நான் ஆன்மீக அனுபவம் மற்றும் ஞானத்தின் ஒரு இமயத்தின் முன் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். என் தலை பணிவுடன் அவர் முன் வணங்கியது. நான் அவரிடம் பிரார்த்தித்தேன்: “மஹராஜ், நான் உங்களுடைய வாழ்க்கை வரலாறை ஒரு சிறிய நூலாக் எழுத விரும்புகிறேன் .”

 

“எதற்காக நீ இந்த பிச்சைக்காரனை பற்றி எழுத வேண்டும். அப்படி எழுதுவதற்கு என்ன இருக்கிறது.”

 

“மஹராஜ், உங்களுக்கு ஒரு வாழ்க்கை வரலாற்று ஆசிரியரோ அல்லது  வாழ்க்கை வரலாறோ தேவை இல்லை என்பது நானறிவேன் . அனால் வருங்கால சந்ததியினருக்காக….” நான் முடிப்பதற்குள் அவர் உரக்க சிரிக்கத்துவங்கினார். அந்த சிரிப்பொலி நீண்ட நேரம் தொடர்ந்தது. பின்னர் அவர் திடீரென்று அமைதி ஆனார்.

 

அவர் விசிறியை மீண்டும் கையிலெடுத்து தனது காதின் அருகில் வைத்து எனது கண்களை உற்றுநோக்கத்  துவங்கினார். சிறிது நேரம் கழித்தது அவர் எழுந்து அருகில் குமித்து வைத்திருந்த புத்தகங்களுக்கு இடையிலிருந்து சிலவற்றை எடுத்து என்னிடம் கொடுத்தார். அவையெல்லாம் அவரை பற்றியவை. ட்ரூமன் சாயலோர் வாடலிங்க்டன் எழுதிய அவரது வாழ்க்கை வரலாறு, “யோகி ராம்சுரத்குமார், தெய்வக்குழந்தை, திருவண்ணாமலை ” (Yogi Ramsuratkumar, Godchild, Tiruvannamalai), அதை தவிர சில சிறு பிசுரங்கள், அவரது ஜெயந்தி விழாவின் பொழுது வெளியிடப்பட்ட மலர்கள், மற்றும் பிரபல தமிழ் எழுத்தாளர் திரு கி. வ. ஜகன்நாதன் அவரைப்பற்றி எழுதிய பாடல்களின் இரண்டு தொகுப்பு நூலகள், ஆகியவையே அவை. அவற்றில் சிலவற்றில் அவர் தனது பெயரை கையொப்பமிட்டு மற்ற சிலவற்றில் எனது பெயரை எழுதினார். “பெயரில் ஒன்றும் இல்லை, இரண்டும் ஒன்று தான்” என்று புன்னகைத்து கூறினார். தனது அழகிய திருஉருவப்படம் ஒன்றையும்  அவர் பரிசளித்தார்.

எனது கண்களில் இருந்து நீர் சிந்துவதை  நான் தடுக்க முயன்றேன். உள்ளத்தில் உணர்ச்சி போங்க நான் அவரிடம் பிரார்த்தித்தேன்: “மஹராஜ், நான் உங்களிடம் தீக்ஷை பெற விரும்புகிறேன்.”

 

“எதற்கு? உனக்கு முன்னமேயே ஒரு பெரிய மஹானிடமிருந்து அது கிடைத்துள்ளது. உனது சாதனையை தொடர்வாயாக. என் தந்தை உன்னை ஆசீர்வதிக்கிறார்.”

 

அவர் எழுந்திருந்து வாசற்படியை நோக்கி நகர்ந்தார். நானும் அவரை பின்தொடர்ந்தேன். வீட்டிற்கு வெளியே வந்து,  பாதையை அடைந்தவுடன் நான் அவரிடம் விடை பெற மீண்டும் விழுந்து வணங்கினேன். சற்றும் எதிர்பாராத்த விதமாக அவர் எனது கரங்களை பற்றிக்கொண்டு பாதையோரமாக வீட்டின் படிக்கட்டில் அமர்ந்தார். என் உள்ளத்தில் உணர்ச்சிப்பெருக்கெடுத்தது. காலம் வேகமாக ஓட, அவர் எனது கரங்களை பற்றிக்கொண்டு சமாதிநிலையில் அமர்ந்திருந்தார். ஒரு பேரானந்த நிலைக்கு இழுத்து செல்லப்படும் உணர்வு என்னுள்ளும் ஏற்பட்டது. இந்த உயர்ந்தகட்ட நிகழ்வுடன் எனது முதல் யோகி தரிசனம் முற்றுப்பெற்றது.

 

1985 ஜனவரி 12 அன்று உலகம் முழுவதும் சுவாமி விவேகானந்தா அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் நான் யோகி ராம்சுரத்குமார் முன்னில் மீண்டும் தோன்றினேன்.  இம்முறை, தென்னாப்பிரிக்காவை சார்ந்த திரு மற்றும் திருமதி டி . எம் . மூட்லி எனும் தம்பதியர்கள் என்னுடன் புனித யாத்திரையாக திருவண்ணாமலைக்கு வந்தனர். சர்வதேச இளைஞர் தினத்தை  முன்னிட்டு பாரத அரசு அந்த நாளை தேசிய இளைஞர் தினமாக அறிவித்திருந்தது. நாங்கள் யோகி ராம்சுரத்குமார் மிக்க மகிழ்வுபொங்கும்  நிலையில் இருப்பதை கண்டோம். அனைத்துநேரவும் அவர் பெருமகிழ்வுடன் கூறிக்கொண்டிருந்தார்: ” ஆஹா ! என்ன பெரிய காரியம் இந்த அரசாங்கம் செய்திருக்கிறது! சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக அறிவித்துள்ளது! என் தந்தை ராஜிவ் அரசாங்கத்தை ஆசீர்வதிக்கிறார்! எவ்வளவு பெரிய செயல் இது! ஆஹா, சுவாமி விவேகானந்தா ! எனது விவேகானந்தா !” ஒரு சிறு குழந்தை பிறந்தநாள் பரிசு பெற்றதுபோல் அந்த செய்தி  பெற்றதில் அவர் மகிழ்வுபூண்டிருந்தார். அவரில் ஒரு தேசபக்தத் துறவியை தெளிவாக காண எங்களால் முடிந்தது. அன்று அவருக்கு சுவாமி விவேகானந்தரை பற்றி அல்லாது வேறு எதுவும் பேசுவதற்கில்லை. இருப்பினும் தோலை தூர நாட்டிலிருந்து வந்துள்ள விருந்தினர்களை திருப்தி செய்வதற்காக அவ்ர தென்னாப்பிரிக்க அரசியல் சூழ்நிலை மற்றும் அங்குள்ள பாரதியர்கள் நலன் குறித்து விசாரித்தார். இருப்பினும் அன்றைய உரையாடல்களை, அவர், தொலைதூர கண்டத்திலிருந்து வந்துள்ளவர்களிடம் சுவாமி விவேகானந்தரின் செய்தியை அங்குள்ள சகோதரர்களுக்கு எடுத்துசெல்லுமாறு ஒரு வேண்டுகோளுடன் முடித்தார். அவருடைய அருளாசியாலும் அன்னை மாயம்மாவின் அருளாசியாலும், சுவாமி விவேகானந்தரின் சேதியை சுமந்துகொண்டு நானே தென்னாப்பிரிக்காவிற்கு செல்வேன் என்று அந்த நேரத்தில் நான் கனவில் கூட நினைக்கவில்லை.

 

தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ் மற்றும் ரியூனியன் நாடுகளில் வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்கு பின் நான் சென்னை திரும்பியபொழுது 1986, மே 8 அன்று ஒரு சிறப்பான வரவேற்பு எனக்களிக்கப்பட்டது.  அடுத்தநாளே நான் திருவண்ணாமலை சென்று யோகி ராம்சுரத்குமார் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். என்னுடன் எனது மக்கள் தவிர இரண்டு பக்தர்களும் வந்திருந்தனர். பகவான் எங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைந்தார். என்னுடன் வந்திருந்த பக்தை இடம் அவர் அவளது பெயரைக்கேட்டார். “சுதா ” என்று அவள் பதிலுரைத்தாள் . “சுதா என்றால் என்ன ?” என்று அவர் கேட்டார். சிறிது வெட்கப்பட்டாலும் துணிவுடன் அவள் பதிலளித்தாள்: “அமுதம் என்று பொருள்.” தனக்கே  உரித்தான நகைச்சுவை உணர்வுடன் பகவான், “என்னிடம் இங்கே அமுதம் கிடையாது, ஆனால் கொஞ்சம் மோர் இருக்கிறது” என்று கூறி, அறையில் இருந்த ஒரு பாத்திரத்தை சுட்டிக்காட்டி அதை எடுத்துவந்து அதிலிருந்த மோரை எல்லோருக்கும் வழங்குமாறு கூறினார். அது எங்கள் அனைவருக்கும் அமுதமாகத்தான் இருந்தது. அவருடன் உரையாடும்பொழுது அவர் சில மாதங்களுக்குமுன் காலமான ஜே .கிருஷ்ணமூர்த்தி அவர்களின் எழுத்துக்களிலிருந்து சில பத்திகளை படிக்குமாறு என்னிடம் கோரினார். உரையாடல் முடிந்தபின் அவர் குறிப்பிட்டார்: மஹான்கள் மறைந்த பிறகு மக்கள் அவர்களை விரைவில் மறந்துவிடுகிறார்கள்.”

 

வீடு திரும்பிய பின் நான் அவரை சந்தித்தது மற்றும் அவருடன் நடந்த உரையாடல்கள் பற்றி நினைவுகூர்ந்தேன். எனது இதயத்தின் ஒரு மூலையில் இருந்து ஒரு குரல் எழுந்தது: “மஹான்கள் உயிர்வாழ்கின்ற காலத்திலேயே மக்கள் அவர்களை அடையாளம் கண்டுகொள்வதில்லை.” யோகி ராம்சுரத்குமாருடனான எனது முதல் சந்திப்பின் பொழுது நான் அவரிடம் அவரது வாழ்க்கை வரலாறை எழுத விரும்புவதாக கூறியதை நினைவுகூர்ந்தேன். இவ்வளவு நாட்களாக நான் உறங்கிக்கொண்டிருந்ததாக ஒரு குற்ற உணர்ச்சி என்னுள் எழுந்தது. .ஆனால் அந்த பணி  மிகப்பெரியதாக தெரிந்தது. தனது கடந்த காலத்தைக்குறித்து யோகி அவர்கள் எதுவும் பேசத்தயாராக இல்லை. அவரது பூர்வாஸ்ரமத்தில் அவருக்கு திருமணமாகி ஒரு மகளும் இருக்கிறாள் என்கிற செய்தி கூட அந்த தாயும் மகளும் திருவண்ணாமலை வந்து, பிறகு காஞ்சன்காடு அனந்தாஸ்ரமத்திற்கு சென்ற பொழுதுதான் சில பாகத்தர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் கூட அவருடன் தங்க அனுமதிக்கப்படவில்லை. அவரது பூர்வாஸ்ரமம் பற்றி தெரிந்துகொள்ள வேறு வழியும் இல்லை. அவருடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு கூட அவரது பூர்வாஸ்ரமம் குறித்து எதுவும் தெரியவில்லை. இத்தகைய பிரச்சனைகள் அவரது வாழ்க்கை வரலாறு எழுதும் நோக்கத்திற்கு இடையூறுகளாக இருந்தன. ஆனால் இந்த நூல் வெளிவரவேண்டும் என்பது அவரது சித்த்தமாக இருந்துள்ளது.  எனது ஆன்மீக சகோதரர் திரு போன். காமராஜ் அவர்கள் என்னிடம் யோகி ராம்சுரத்குமார்  பற்றிய ஒரு நூல் ஆங்கிலத்தில் எழுதவேண்டுமென்று கேட்டுக்கொண்டு  அதை நாகர்கோயிலில் நடைபெறும் யோகி ஜெயந்தி விழாவில் வெளியிட விரும்புவதாக கூறிய பொழுது  அதை எழுதுவதற்கான நேரமும் வந்தது.

 

இந்த சிறிய நூல் நவீன காலத்தில் பாரத அன்னை பெற்றெடுத்துள்ள ஒரு மிகப்புனிதரான மஹானுக்கு செலுத்தும் எளிமையான போற்றுதலாகும். யோகியுடன் நெருக்கமாக பழகி அவர்களுடைய உரையாடல்களையும், வாழ்க்கை நிகழ்வுகளையும்  தங்களது அனுபவங்களையும் பதிவு செய்து வைத்துள்ள எனது ஆன்மீக சகோதரர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மேற்கொண்டுள்ள எளிய முயற்சி அந்த மகா யோகியின் சில தரிசனங்களை வெளிக்காட்டி அவரது ஒளிரும் வாழ்க்கையை நம் தாய்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீக வரலாற்றின் பரந்த விதானத்தில் வைப்பது என்பதுதான். அதன் மூலம் சாதாரண மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இந்த மறைந்து நிற்கும் மாபெரும் ஆன்மீகப்பெருந்தகையின்பால் ஈர்க்கப்படுவார்கள். இந்த நூல் இன்று நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் மாபெரும் ஆன்மீக ஆற்றலின் உருவகத்தின்பால் ஈர்க்கப்படுவதற்கும் அவரது அனுக்கிரகத்தை பெறுவதற்கும் நமது இளம் பக்தர்களுக்கு உதவுமாகில் அது யோகி ராம்சுரத்குமார் அவர்களுடைய அருளாசி மற்றும் அவர் எப்பொழுதும் அவரது பக்தர்கள் மீது சொரிகின்ற அவரது தந்தையின் அருளாசியும் ஆகும்.

 

ரிஷிகேஷ் தெய்வ ஜீவன சங்கத்தின் (தீவின் லைப் சொசைட்டி) தலைவர் பூஜனீய சுவாமி சிதானந்தர் இந்த எளிய நூலுக்கு ஆசி வழங்கியுள்ளது இறையருள் என்றே நான் கருதுகிறேன். அவரத்து காலடிகளில் எனது நன்றி கலந்த வணக்கத்தை நான் சமர்ப்பிக்கின்றேன்.

 

இந்த நூலை எழுத என்னை தூண்டியதற்கு நான் திரு போன். காமராஜ் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எனது சகோதர சாதகர்கள், திரு வி. ரங்கநாதன் மற்றும் பி. ராஜகோபால் ஆகியவர்கள் கையெழுத்து பிரதியை தட்டச்சு செய்ததற்கும், எனது மகள் சௌ. நிவேதிதா இதை கணினியில் தட்டச்சு செய்ததற்கும், சென்னை மனோரமா அச்சகத்தின் நிறுவனர் திரு எ. ஆர். ராவ் அவர்கள் மிக தாராள மனப்பான்மையுடன் இதை நூல் வடிவில் குறித்த நேரத்தில் அச்சிட்டு தந்ததற்கும் நான் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த நூலிற்கு தேவையான, வண்ண புகைப்படத்தை வழங்கிய திரு ஆர். கே. ஆழ்வார் அவர்களுக்கும், அழகிய அட்டைப்படத்தை தயார் செய்த டெக்கோவின் நிறுவனர் திரு தி. பாஸ்கரதாஸ் அவர்களுக்கும் நான் நன்றியுடையவனாவேன்.

 

இந்த ஞான சாதனைக்கு உதவிபுரிந்துள்ள அனைவருக்கும் புனித அன்னை மாயம்மா மற்றும் யோகி ராம்சுரத்குமார் ஆகிய இருவரின்  அருளாசிகளும்  உரித்தாகுக !

 

வந்தே மாதரம்!

சென்னை                                                                     பேராசிரியர் வே. ரங்கராஜன்

23-11-1987

இரண்டாவது பதிப்பின் முகவுரை

 

என்னுடைய குருநாதனின் அருளாசி வெகுவிரைவில் இந்த நூலின் விரிவான இரண்டாவது பதிப்பை வெளிக்கொண்டுவர வகை செய்துள்ளது. இந்த நூல் வெளியான பிறகு ஆசிரியரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி குருநாதரின் காலடிகளில் முழுமையாக சரணடைய வைத்துள்ள குருநாதனுடனான உள்ளத்தை நெகிழவைக்கும் அனுபவங்களை உட்கொண்டு இந்த இரண்டாவது பாதிப்பு வெளியாக்குகிறது. வாசகர்கள் அனைவருக்கும் எனற்றது குருநாதரின் அருளாசிகள் உரித்தாகுக.

 

சென்னை                                                                     பேராசிரியர் வே ரங்கராஜன்

குரு பூர்ணிமா, 29 7 1988

யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு விழா நினைவு தொகுதியின் முகவுரை

 

` வேத ரிஷய ஸமாரப்ய வேதாந்தாசார்யா மத்தியமா:

யோகி ராம்சுரத்குமார பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்!

 

வேத ரிஷிகளில் துவங்கி வேதாந்தாச்சார்யார்கள் வழி எனது தீக்ஷா குரு, திருவண்ணாமலை தவயோகி, யோகி ராம்சுரத்குமார் வரை, இந்த பாரத வர்ஷத்தில் அவதரித்துள்ள அனைத்து மஹான்களுக்கும் எனது பணிவான அடிபணித்தலும் வணக்கமும்!

 

1988 ஏப்ரல் 26, செவ்வாய்க்கிழமை, பாப்பா ராமதாஸ் அவர்களின் புனிதமான ஜெயந்தி நன்னாளில் திருவண்ணாமலை   மலைமீது அமைந்துள்ள ஆலமர குகை என்றறியப்படும்   பாப்பா ராமதாஸ் குகையில் பகவான் யோகி ராம்சுரத்குமார் இந்த சாதுவிற்கு தீக்ஷை வழங்கிய உடன்  இந்த சீடனை  அவர் அங்கு தனது  குருநாதர் பாப்பா ராமதாஸ் அவர்களின் ஜெயந்தி விழாவிற்காக குழுமியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தினார்.

 

பெருமையுடைய பேராசிரியரை ஒரு எளிய சாதுவாக மாற்றிய பின்னர் இந்த சீடனிடம் அவனது பெயரிலிருந்து எதையும் விட்டுவிடக்கூடாது என்று கூறி “சாது பேராசிரியர் வே. ரங்கராஜன்” என்றே அவனது பெயர் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அந்த பெயரே நிலைத்துவிட்டது. மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ — ” தாய் தெய்வமாக இருக்கட்டும், தந்தை தெய்வமாக இருக்கட்டும், ஆசார்யன் தெய்வமாக இருக்கட்டும்” — என்று சாஸ்திரங்கள் முழங்குகின்றன. மற்ற குருமார்கள் போல் தனது சிஷ்யனுக்கு புது சன்னியாஸ நாமம் வழங்காமல், எனது குருநாதர், அவனது தந்தை அவனுக்கு வழங்கிய பெயரே நிலைத்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் மீண்டும் கூறினார்: துறவு என்பது எதையும் விடுவதல்ல, எதையும் எடுத்துக்கொள்வதும் அல்ல,… நேற்றுவரை நீ விரும்பியபடி எல்லாச்செயல்களையும் புரிந்து வந்தாய், ஆனால், இன்றுமுதல் இந்த பிச்சைக்காரன் அவனது தந்தையின் பணிகளை உன் மூலமாக செய்யப்போகிறான்.”

 

தீக்ஷைக்குப்பின் இந்த சாது முதல் முறையாக உரைநிகழ்த்திய, பகவான் யோகி ராம்சுரத்குமாரவர்களின் பக்தர்களின் மாபெரும் கூட்டம், இரண்டுவார காலத்திற்குள் நடைபெற்றது. 1988 மே 7 மற்றும் 8 தேதிகளில், புதுச்சேரியில் கம்பன் கலை அரங்கில், பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தீவிர பக்தர்களான தொழிலதிபர், திரு எ. ஆர். பி .என். ராஜமாணிக்கம், மற்றும் புதுவை பலகலை  கழகத்தின் துணை வேந்தர், டாக்டர் கே. வேங்கடசுப்ரமணியம் ஆகியோர்    ஏற்பாடு செய்திருந்த, “மனித இனத்தின் விதி மற்றும் தவத்திரு யோகி ராம்சுரத்குமார் அவர்களின் சேதி ” என்ற தலைப்பிலான ஒரு மாபெரும் கருத்தரங்கம் ஆகும் அது . பகவானின் அருளாசிகளுடன் இந்த சாது அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மே 6-ம் தேதியே புதுச்சேரிக்கு வந்துசேர்ந்தான். அங்கு சென்றபின் சாது செய்த முதல் காரியம், மே 7 அன்று காலையில் தனது பரமகுரு மகா யோகி  ஸ்ரீ அரவிந்தரின் ஆஸ்ரமத்திற்கு சென்றதாகும். பகவான் யோகி ராம்சுரத்குமார் தனது குருமார்களான மூன்றுபேர்களை தனது “மூன்று தந்தையர்கள்” என்று குறிப்பிடுவார் — முதல்வர், புதுச்சேரியின் மகா யோகி  ஸ்ரீ அரவிந்தர், இரண்டாமவர், திருவண்ணாமலை  பகவான் ரமணா மஹரிஷி மற்றும் மூன்றாமவர், காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தின் பாப்பா ராமதாஸர். கண்களில் நீர்மல்க இந்த சாது மகா யோகி ஸ்ரீ அரவிந்தரின் சமாதியில் சிரம் வைத்து, அவரது பணிக்கு இந்த எளியோனை ஒரு கருவியாக்கினதற்கு நன்றி செலுத்தினான். இந்த சாது கருத்தரங்கு நடைபெறும் கலை அரங்கத்திற்கு வந்து சேர்ந்தவுடன் பகவானின் பக்தர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். ட்ரினிடாடிலிருந்துவந்த ஒரு பக்தை, பண்டித இந்திராணியும், அவருடன் இணைந்தாள் புகழ்மிக்க எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் அந்த கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார்கள். 1988 மே 8 அன்று, பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு அர்பணிக்கப்பட்டிருந்த “தத்துவதர்சனா” காலாண்டு இதழின் நான்காவது ஆண்டுமலரை திரு ரமணி குருஜி அவர்கள் வெளியிட, திரு ராஜமாணிக்கம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். டாக்டர் பாலச்சந்திரன் மற்றும் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் முன்னாள் ரெஜிஸ்ட்ரார் திரு சங்கரராஜுலு, சாதுவின் “ஒரு மகா யோகி யின் தரிசனங்கள் ” என்ற நூல் மற்றும் “தத்துவதர்சனா” சிறப்பு மலர் குறித்து பேசினார்கள். கருத்தரங்கின் பொழுது , “மனித இனத்திற்கு ஒரு தெய்வீக செய்தி ” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட விசேஷ மலரில், “தத்துவதர்சனா” சிறப்பிதழிலிருந்து எடுக்க ப்பட்ட கட்டுரைகள் மற்றும் யோகி ராம்சுரத்குமாரின் அமுதமொழிகள் இடம்பெற்றிருந்தன. கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு துறவி அன்னை, ஓம் பவதாரிணி  அம்மாள் , பூர்வாசிரமத்தில் சாதுவின் பக்தையாக இருந்தவர், சாதுவை தேசியத்தையும் சமயத்தையும் இணைத்த “நவீன பாரதியார்” என்று குறிப்பிட்டார். கருத்தரங்கில் உணர்ச்சிமிக்க ஒரு உரைநிகழ்த்திய சாது, மகா யோகி ஸ்ரீ அரவிந்தர் மற்றும் யோகி ராம்சுரத்குமார் ஆகியோரின் கனவுகளை நனவாக்கவும் பாராதவர்ஷத்தை மீண்டும் உலக குருவின் அரியணையில் அமர்த்தவும், தேசியத்தையும் ஆன்மிக சாதனையையும் ஒன்றுசேர்த்து உயர்த்தவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். கருத்தரங்கு முடிந்த உடன், சாது. ” தத்துவ தர்சனா”  சிறப்பிதழின் பிரதிகளை, குருநாதர் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு, மற்றொரு பக்தர் போன். காமராஜ் மூலம் அனுப்பிவைத்தார்.

 

பகவானின் செய்தியை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரப்புகின்ற சாதுவின் பணி இப்பொழுது ஆரம்பமாயிற்று.  இதுமுதல் சாதுவின் ஒவ்வொரு செயல்பாடும் அவ்வப்பொழுது பகவானுக்கு தெரிவிக்கப்பட்டு அவரது ஆசிகள் பெறப்பட்டன. பகவான் ஆணையிட்டபடி, ஒவ்வொருமுறையும் சாது திருவண்ணாமலைக்கு வருவதற்குமுன், பகவானுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டு, ஒரு தாய் பசு மேச்சிலுக்கு சென்றிருக்கும் தனது கன்று திரும்பிவருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதை போல், பகவான் சாதுவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்து, அவர் வந்ததும்  அவரை ஆர்வமுடன் வரவேற்பார்.

 

“ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பு, பகவானின் திருக்கரங்களால் 1988 ஜூலை 27 அன்று குருபூர்ணிமா நன்னாளில் வெளியிடப்பட்டது. சாதுவிற்கு பகவானால் தீக்ஷை வழங்கப்பட்ட நிகழ்வுகுறித்த விவரமும் பகவானை பற்றிய ஒரு கட்டுரையும் “தத்துவதர்சனா” நான்காவது ஆண்டு மலரில் வெளியிடப்பட்டிருந்தவை  இந்த நூலில் சேர்க்கப்பட்டிருந்தன. குருநாதர் இந்த சாதுவையும் மற்ற பக்தர்களையும் அந்த நூலின் அத்தியாயங்கள் மற்றும் இதழில் வெளிவந்த கட்டுரைகளையும் மீண்டும் மீண்டும் வாசிக்கச்சொல்வதில் ஆர்வம் காட்டினார்.

 

“யோகி ராம்சுரத்குமார், தெய்வக்குழந்தை, திருவண்ணாமலை” என்ற ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் எழுதிய நூலின் மறுபதிப்பு வெளிக்கொண்டுவருவது பற்றி இந்த சாது பகவானிடம் பேசிய பொழுது, பகவான், அதற்கு ஆசிரியரின் அனுமதி தேவை என்றும் ஆகையினால்  “ஒரு மகா யோகி யின் தரிசனங்கள்” என்ற நூலின் மூன்றாம் பதிப்பு வெளிக்கொண்டுவருமாறும் சாதுவிடம் கூறினார். அதன்படி, 1990 அக்டோபர் 17, தீபாவளி திருநாளன்று, அந்த பதிப்பு வெளியிட ஏற்பாடாயிற்று. இருப்பினும் இந்த சாது பகவானின் ஆணைப்படி ராமநாம பிரச்சாரப்பணிக்காக வட இந்தியா  செல்லவேண்டியிருந்ததால்,  இரண்டு நாட்கள் முன்னதாகவே, 1990 அக்டோபர் 15 அன்று, பகவான் அந்த பதிப்பை வெளியிட்டார்.

 

“ஒரு மகா யோகி யின் தரிசனங்கள்” இரண்டாவது பகுதியின் உள்ளடக்கம், யோகியிடம் தீக்ஷை பெற்ற பின் பலமுறை பகவானின் இல்லத்திற்கு சாது சென்றுவந்த அனுபவங்கள் குறித்தும், அடிஅடியாக பகவான் சாதுவிற்கு வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் பகவானது எல்லையற்ற அருளாசியை அவர் சாதுவிற்கு வழங்கியது குறித்தும் தொடர் வர்ணனைகள், “தத்துவ தர்சனா”வில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டவை, ஆகும். பகவானின் அருளாசிகளுடன் “யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம்” துவக்கப்பட்டது குறித்தும் அந்த சங்கம், பகவானின் குருபகினி, காஞ்சன்காடு அனந்தாஸ்ரமத்தின் மாதாஜி கிருஷ்ணாபாய்,  துவங்கிய 15,500 கோடி நாம ஜெப யக்ஞத்திற்கு உதவுவதற்காக, பகவானின் ஆணைப்படி பாரதத்திற்கு உள்ளேயும் வெளிநாடுகளிலும் ராமநாமத்தை  பரப்புகின்ற பணியை மேற்கொண்டு, அகில உலக ராமநாம இயக்கம்  துவங்கியது பற்றியும் விளக்குகிறது.  அவ்வப்பொழுது பகவானின் ஆணைக்கு ஏற்ப, குறிப்பிட்ட தலைப்புகளில் “தத்துவ தரிசனா”வில் தலையங்கங்கள் எழுதிவந்துள்ளது குறித்தும், பகவானை பற்றிய நூல்களை சகோதரி நிவேதிதா அகாடமியின் வெளியீடுகளாக கொண்டுவந்துள்ளது குறித்தும், இந்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. பகவான் சாதுவின் மீது வைத்திருந்த அபார நம்பிக்கை காரணமாக அவரது பிரதிநிதியாக சாதுவை அவர் செயல்பட வைத்தது குறித்தும், மா தேவகியை பகவானின்  “நிரந்தர அடிமை” என்று “தத்துவதரிசனா” இதழ் மூலம் அறிமுகப்படுத்த ஆணையிட்டது குறித்தும்  விளக்குகிறது. சாதுவின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோது, தனது சிஷ்யனை உறுதியுடன் பகவான் ஆதரித்தது பற்றியும் யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற சாதுவிற்கு கட்டளை இட்டது பற்றியும், ஆசிரமத்தில் சில பிரச்சனைகள் எழுந்தபோது, சாதுவை அவரது எல்லா வேலைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு தன் அருகிலேயே இருந்து ஆசிரமத்தின் பணிகளை  மேற்கொள்ளச்சொன்னது பற்றியும் இந்த பகுதி வெளிச்சமிட்டு காட்டுகிறது.

 

“ஒரு மகா யோகி யின் தரிசனங்கள்”, பகுதி மூன்று, பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுடைய வாழ்க்கையின் கடைசி தசகத்தில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகள் குறித்து விளக்குகிறது. பகவானுடன் தங்கியிருந்த நாட்களிலும் பகவானை சந்திக்க அடிக்கடி அவரது இல்லத்திற்கு செல்லுகின்ற பொழுதிலும் பகவான் சாதுவுடன் சமயம், தத்துவ சிந்தனை, கலாச்சாரம், தேசிய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் போன்று மிக விரிவான விஷயங்கள் குறித்து நிகழ்த்தியுள்ள உரையாடல்களையும் இந்த பகுதி உட்கொண்டுள்ளது. ஆஸ்ரமத்தின் அறக்காப்பாளர்களுடன் அவரது விவாதங்கள், அவரது சிஷ்யனுக்கு அவ்வப்பொழுது அவரது பக்தர்கள் மூலம் செய்தி அனுப்பி அவரது பணிகளிற்காக செயலாற்ற வழிகாட்டுதல்கள் வழங்குதல், கலந்துரையாட சாதுவை திருவண்ணாமலைக்கு வருமாறு உத்தரவிடுதல், அவரையும் ஆஸ்ரமத்தையும் குறித்த முக்கியமான விஷயங்கள் பற்றி வழிகாட்டுதல்கள் வழங்குவது, ஆஸ்ரமத்தை பற்றி வெளிவந்த பத்திரிகை செய்திக்கு அவர் சார்பில் பதிலளிக்க இந்த சாதுவிற்கு உத்திரவிடுதல், சாதுவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணிகளுக்கு இடையராத வழிகாட்டுதல், சாதுவின் ஒவ்வொரு செயல் பற்றியும் இடைவிடாது பகவானுக்கு அவரது மஹாசமாதிகாலம் வரை எழுதப்பட்டுள்ள கடிதங்கள்  ஆகியவைகள் மிக விளக்கமாக  விவரிக்கப்பட்டுள்ளன.  பகவானின் பணியில் சாது மேற்கொண்டுள்ள தூரதேச பயணங்கள், பகவானின் இல்லத்திற்கு வெளிநாட்டு பக்தர்களின் வருகை, பகவானின் அருளாசிகளுடன் பெங்களூரில் பாரதமாதா குருகுல ஆஸ்ரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இன்டோலோஜிக்கல் சென்டர் நிறுவப்பட்டது, ஸ்ரீ பாரதமாதா மந்திர் அமைக்கப்பட்டு அதில் பாரதமாதா பிரதிஷட்டை செய்யப்பட்டது மற்றும் அந்த மந்திரின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது ஆகியவை இந்த பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்தக் சாதுவின் பணிகள் குறித்து விளக்கியும் பகவானின் ஆசிகளையும் அனுமதியையும்வெண்டியும் இடையறாது பகவானுக்கு இந்த சாது எழுதியுள்ள கடிதங்கள் தேதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன. பகவானுடன் இந்த சாதுவின் உரையாடல்கள் தேதி, நேரம் மற்றும் அந்த நேரத்தில் உடனிருந்தவர்கள் பற்றிய தகவல்களுடன் விவரமாக விளக்கப்பட்டுள்ளன.

 

இந்த மூன்று பாகங்களிலும் அடங்கியுள்ள விவரங்கள் இந்த சாதுவின் அறிவுபூர்வமான பணியல்ல, மாறாக அவனது உள்ளத்தில் அவனது குருநாதன் தூண்டியெழுப்பும் உணர்ச்சி வெள்ளத்தின் பெருக்காகும். வாருங்கள், மஹா குரு யோகி ராம்சுரத்குமாரருடன் இந்த எளிய சீடன் சாதுவிற்கு ஏற்பட்டுள்ள ஆன்மீக அனுபவங்களின் கங்கை பிரவாகத்தில் நீச்சலடிப்போம். பாரதவர்ஷத்தின் நவீன காலத்தில் தோன்றிய மாபெரும் அவதாரங்களில் ஒருவராகிய பகவான் யோகி ராம்சுரத்குமார் மஹராஜ் அவர்களின் வாழ்க்கை மற்றும் அவரது சேதி குறித்த ஒரு சிறப்பான மற்றும் முழுமையான தொகுப்பாக இந்த யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு நினைவு தொகுப்பு நிரூபணமாகும்.  நமது வாழ்நாளில் நம்மிடையே வாழ்ந்து செயலாற்றிய, மனித உருவில் நடமாடிய, அந்த தெய்வசக்தியின் சிறந்த தரிசனம் பெற, அவரது ஆன்மீக நாட்டம் கொண்ட பக்தர்களுக்கு அவரது அருளாசிகள் உரித்தாகட்டும்.  இந்த நூலிற்கு முகவுரை எழுதியுள்ள திரு ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த நூலை முழுமையாக பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ள, மோரீஷியஸ்   யோகி ராம்சுரத்குமார் பாவனை சார்ந்த, திரு கிருஷ்ணா கார்ஸல் அவர்களுக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.  பகவானின் புகைப்படங்களை தந்து உதவியுள்ள யோகி ராம்சுரத்குமார் பக்தர்களுக்கும் எங்களது நன்றிக்கடன் உரித்தாகும்.

 

வந்தே மாதரம்! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் !

ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராய!

 

பெங்களூரு                                  — சாது பேராசிரியர் வே. ரங்கராஜன்

யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு தினம்

1-12-2017

 

 

 

 

உள்ளடக்கம்

 

ஆசியுரை

முன்னுரை

முதல் பதிப்பிற்கு பதிப்பகத்தாரின் குறிப்பு

நூற்றாண்டுவிழா நினைவு பதிப்பிற்கு

பதிப்பகத்தாரின் குறிப்பு

முதல் பதிப்பின் முகவுரை

இரண்டாவது பதிப்பின் முகவுரை

யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு விழா நினைவு தொகுதியின் முகவுரை

 

பகுதி – I பகவான் யோகி ராம்சுரத்குமாரின் காவியம்

 

அத்தியாயம் 1.1  காலை நட்சத்திரம்

அத்தியாயம் 1.2  அந்தி

அத்தியாயம் 1.3  விடியல்

அத்தியாயம் 1.4  தகிக்கும் சூரியன்

அத்தியாயம் 1.5  முடிவிலா ஒளி

அத்தியாயம் 1.6  பொங்கும் கருணை

 

பகுதி – II சீடன் கண்ட தீக்ஷா குரு

 

அத்தியாயம் 2.1   குருவே தாய், குருவே அரசன்

அத்தியாயம் 2.2 தெய்வீக குரு

அத்தியாயம் 2.3  பெரும் யாசகன்

அத்தியாயம் 2.4  பிக்ஷா குரு

அத்தியாயம் 2.5  குருவின் எல்லையற்ற தன்மை

அத்தியாயம் 2.6  யோகி ஜெயந்தியும், இளைஞர் சங்கமும்

அத்தியாயம் 2.7  பணிவின் இமயம்

அத்தியாயம் 2.8  பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாயின் மஹாசமாதி

அத்தியாயம் 2.9  உலக ராம்நாம் இயக்கத்தின் தோற்றம்

அத்தியாயம் 2.10  ‘ராம்நாம்’ எனும் சுடரின் பரவல்

அத்தியாயம் 2.11  இறங்கி வந்த தெய்வீக கருணை

அத்தியாயம் 2.12  பகவான் – தெய்வீக மருத்துவர்

அத்தியாயம் 2.13  சீடனின் பிறந்தநாளில் குருவின் ஆசி

அத்தியாயம் 2.14  ராம்நாம் சப்தாஹம் மற்றும்

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி

அத்தியாயம் 2.15  “ஹிந்துயிசம் டுடே” யோகி ராம்சுரத்குமாரின் நேர்காணல்

 

அத்தியாயம் 2.16  யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின்                                                   முதலாமாண்டு விழா

அத்தியாயம் 2.17  சாதுவின் அன்னையின் நித்திய உறக்கம்

அத்தியாயம் 2.18  யோகி ராம்சுரத்குமார் நற்செய்திகள்

அத்தியாயம் 2.19  பகவான் வெளியிட்ட சகோதரி நிவேதிதா அகாடமியின்                            வெளியீடுகள்

அத்தியாயம் 2.20  பகவானின் உடல் நலமின்மையும்,

சிஷ்யனின் சங்கடமும்

அத்தியாயம் 2.21  உ.பி.யின்  தீயில் இருந்து சீடனை பாதுகாத்த குரு

அத்தியாயம் 2.22  யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி 1990 மற்றும்                                                   தமிழகத்தில் தீவிரமான ராம்நாம் பிரச்சாரம்

அத்தியாயம் 2.23  மகாராஷ்டிராவில் பரவிய ராம்நாம் பிரச்சாரம்

அத்தியாயம் 2.24  உ.பி. யில் ராம்நாம் தீயும்,

கங்கா மாதா மடியில் பகவானின் அற்புதமும்

அத்தியாயம் 2.25  சென்னையில் 1991 ல் நடந்த பிரம்மாண்ட

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி

அத்தியாயம் 2.26    தேசீய இளைஞர் தினம் மற்றும்

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாக்கள் 1992

அத்தியாயம் 2.27    ராம்நாம் இயக்கத்தின் விரைவான முன்னேற்றங்கள்

அத்தியாயம் 2.28    சாதுவின் பணிகளுக்கு யோகிஜி பொழிந்த ஆசிகள்

அத்தியாயம் 2.29   வடக்கில் பரவும் ராமநாம தீப்பிழம்புகள்

அத்தியாயம் 2.30  ‘முதன்மை சிஷ்ய’னை வடிவமைத்தல்

அத்தியாயம் 2.31  பகவானின் தூதர்

அத்தியாயம் 2.32  தெற்கில் பரவிய குருவின் பணி

அத்தியாயம் 2.33  தீக்ஷை பெற்ற சீடனிடம் பகவானின் லீலைகள்

அத்தியாயம் 2.34  பகவான் முன்னிலையில்

அவரின் சரிதம் எழுதிய இருவரின் சந்திப்பு

அத்தியாயம் 2.35  யோகி ராம்சுரத்குமார் இந்தோலஜிக்கல்  ஆராய்ச்சி                                                 மையத்தின் முதல் பிரசுரம்

அத்தியாயம் 2.36  தனது “நித்திய அடிமை“ யை ஆசீர்வதிக்க

தனது சிஷ்யனுக்கு உத்தரவிட்ட குரு

அத்தியாயம் 2.37  பகவான் “நித்திய அடிமை” தேவகியை                                                             அறிமுகப்படுத்தும் “தத்துவ தர்சனா”வை வெளியிடுகிறார்

அத்தியாயம் 2.38  பகவான் சாதுவை காத்தலும்,  ஆசிரமத்தின் பொறுப்பை                           ஏற்க கட்டளையிடுதலும்

பகுதி – III சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

 

அத்தியாயம் 3.1  பகவானின் தொண்டில்

சாதுவின் திருவண்ணாமலை வாசம்

அத்தியாயம் 3.2  யோகியின் இறையருட்பணிகளின்

அணிவகுப்பு முன்னேற்றம்

அத்தியாயம் 3.3  ‘தி மவுண்டன் பாத்’ எதிராக ‘தத்துவ தர்சனா’

அத்தியாயம் 3.4  “விஷத்தை விழுங்கிய சிவன்”

என சீடனை புகழ்ந்த பகவான்

அத்தியாயம் 3.5      பகவான் மற்றும் தேவகியுடன்

தங்கிய சாதுவும், பாரதியும்

அத்தியாயம் 3.6      தெற்கிலும், வடக்கிலும் ராமநாம பிரச்சார விரிவாக்கம்

அத்தியாயம் 3.7      “அருணை யோகி குரு நாம மகிமை” வெளியீடு

அத்தியாயம் 3.8      இராமேஸ்வரம் சத்சங்கத்தில் ஒரு லட்சம் பக்தர்கள்,                                          மற்றும் சாதுவின் தென் ஆப்பிரிக்கா பயணத்திற்கு                                               பகவானின் ஆசிகள்

அத்தியாயம் 3.9      தென் ஆப்பிரிக்காவில் உலக ஹிந்து மாநாடு

அத்தியாயம் 3.10     தென் ஆப்பிரிக்காவில் சகோதரி நிவேதிதா அகாடமி

அத்தியாயம் 3.11     நிவேதிதாவின் திருமணத்த ஆசீர்வதித்த பகவான்

அத்தியாயம் 3.12 அனைத்திந்திய ராம்நாம் ஷிபிர் (முகாம்)

மற்றும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி 1995

அத்தியாயம் 3.13     தென் ஆப்பிரிக்கா செல்லும் தனது தூதரை

ஆசீர்வதித்த பகவான்

அத்தியாயம் 3.14     தென் ஆப்பிரிக்காவில் பகவான்

யோகி ராம்சுரத்குமாரின் பணி

அத்தியாயம் 3.15     “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” –

பகவான் வெளியிட்ட ஜெர்மன் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் 3.16     பகவானின் சார்பாக “தினமலர்” பத்திரிகைக்கு பதில்

அத்தியாயம் 3.17     வெளிநாட்டிற்கு போகும் முன்

சாதுவிற்கு புதிய பொறுப்புகள்

அத்தியாயம் 3.18  தென் ஆப்பிரிக்காவில் பகவானின் அற்புதம்

அத்தியாயம் 3.19     சாதுவின் ஐந்தாவது தென் ஆப்பிரிக்க பயணத்திற்கு                                             அனுமதித்த பகவான்

அத்தியாயம் 3.20    பாரதமாதா குருகுல ஆசிரமம்

கட்டுமானத்தை ஆசீர்வதித்த பகவான்

அத்தியாயம் 3.21     1998 யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியில்

வெளிநாட்டு பக்தர்கள்

அத்தியாயம் 3.22    பாரத மாதா குருகுல ஆசிரமத்தின்

பூமிபூஜைக்கு பகவானின் ஆசிகள்

அத்தியாயம் 3.23    தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில்

சாதுவின் தர்ம பிரசாரம்

அத்தியாயம் 3.24    நேபாள் பயணம், யோகி ஜெயந்தி மற்றும்

பாரதமாதா குருகுல ஆசிரமத்தின் துவக்கம்

அத்தியாயம் 3.25    பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு

தர்மச்சார்யார்களின் வருகை

அத்தியாயம் 3.26    விவேக்கின் திருமணத்தை ஆசீர்வதித்த பகவான்

அத்தியாயம் 3.27     பகவானின் மோசமான உடல்நிலையும்,

சாதுவின் துன்பமும்

அத்தியாயம் 3.28    பகவான் யோகி ராம்சுரத்குமாரின் மஹாசமாதி

அத்தியாயம் 3.29 எனது குருவின் பக்தர்களுக்கு

ஒரு அன்பான வேண்டுகோள்

அத்தியாயம் 3.30 ஸ்ரீ பாரதமாதா மந்திர்

பிரதிஷ்டையும் & மஹா கும்பாபிஷேகமும்