நூல் விமர்சனம்
யோகியும் சாதுவும்
வி. எஸ். ஆர்.கெ.
ஒரு மகா யோகியின் தரிசனங்கள் ( யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு நினைவு தொகுப்பு ) நூல் ஆசிரியர் : சாது பேராசிரியர் வே. ரங்கராஜன் வெளியிடுவார்: சகோதரி நிவேதிதா அகாடமி , ஸ்ரீனிவாசநகர் , கிருஷ்ணராஜபுரம் , பெங்களூரு 560 036. தொலைபேசி எண் : 9180-25610935. ஆங்கில மூல நூல் :- விலை: ரூ 500/- பக்கங்கள் 980
ஒரு மகா யோகியின் தரிசனங்கள் ஒளிர்வுகள் (மூல நூல் சுருக்கம்) விலை ரூ 200/- பக்கங்கள் 474
‘தரிசனங்களை’ பார்வையிடும்பொழுது ஒரு வாசகர் இந்த நூலின் தலைப்பு “ஒரு மகாயோகியின் தரிசனங்கள்” என்று வைத்துள்ளது பொருந்தாததாகும் என்று எண்ணலாம். ‘தரிசனங்கள்’ முக்கிய கதாபாத்திரத்தை விட ஆசிரியருடையது தான் அதிகமாக உள்ளது. முரண்பாடாக கதாபாத்திரம், தான் ஒரு மஹான் என்றோ யோகி என்றோ கூறப்படுவதை விட தன்னை ஒரு ‘பிச்சைக்காரன்’ என்றே கூறிக்கொள்கிறார். இருப்பினும் சாதாரண மக்கள் முதல் பெரும் பண்டிதர்கள் வரை சமுதாயத்தின் பல நிலைகளிலுள்ளவர்களை இந்க் குருநாதர் ஈர்த்துள்ளதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அவர்களுக்கெல்லாம் அவர் ஒரு யோகி, துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர், மற்றும் இறைவனை அடைய வழிகாட்டுபவர் ஆவர்.
ஆசிரியருக்கும் யோகிக்கும் இடையில் விசேஷமான ஒரு ஆன்மீக பந்த்தம் உண்டு. குருநாதரால் ‘சாது பேராசிரியர் ரங்கராஜன்’ என்று அழைக்கப்பட்ட ஆசிரியர் 1988 (அப்பொழுது அவருக்கு வயது 48) முதல் குருநாதருக்குத் தெரியாமலோ, அவரது வழிகாட்டுதல் பெறாமலோ, வாழ்க்கையில் எந்த ஒரு முடிவையும் எடுத்ததில்லை, மற்றும் எந்த ஒரு அடியையும் எடுத்துவைக்கவில்லை, என்பது தெரிகிறது. சிஷ்யன் யோகியை ‘ஆன்மஞானம் மற்றும் அனுபவத்தின் இமயம்’ என்று கண்டார். பதிலுக்கு குருநாதரோ “எனது தந்தையின் பணிக்கு” கருவியாக சாதுவை கண்டார்.
“தந்தை” என்று மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர் கேரள மாநிலத்தின் காஸர்கோடு ஜில்லாவிலுள்ள காஞ்சங்காடு ஆனந்த ஆஸ்ரமத்தை சார்ந்த சுவாமி ராமதாஸ் (1884-1963) ஆவர். 1952 – ல் மூன்றாவது முறையாக ஸ்ரீ ராம்சுரத்குமார் ஆனந்தாஸ்ரமத்திற்கு வந்த பொழுது — அப்பொழுது யோகியின் வயது 34 — ஸ்வாமிகள் அவரிடம் அவரது வாழ்க்கையின் லக்ஷியம் மக்களை ராமனின் திருநாமத்தை, ‘ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்‘ எனும் மந்திரமாக ராமநாம ஜெபத்தை, உச்சகரிக்க தூண்டுவது மட்டுமே என்று பணித்தார். இந்த நாம ஜபம் மட்டும் தான் மக்களை முக்தி — ஆன்மீக லக்ஷியமாகிய மோக்ஷம் அல்லது வீடு — பெற செய்யும் என்று ஸ்வாமிகள் உறுதிபடக்கூறினார்.
யோகியின் பணியின் ஆரம்பமாக இது அமைந்தது . அவருடைய ஆன்மீக நாட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே 1947-ல் ஆரம்பமாகியிருந்தது. 1918 டிசம்பர் 1 அன்று உத்தரபிரதேச மாநிலம் பல்லா ஜில்லாவில் ( காசிக்கு அருகில் ) ஒரு கிராமத்தில் ஒரு விவசாயியின் குடும்பத்தில் பிறந்தது முதல் அதுவரை அவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் ஒரு கல்லூரியில் படித்து, ஆசிரியர் தொழிலுக்கு தகுதி பெற்றார். அவர் நான்கு மக்கள்–மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன்–அடங்கிய ஒரு குடும்பத்தின் தலைவராக இருந்தார். ஆனால் நாம் சுதந்திரம் பெற்ற ஆண்டில், அவருக்கு 29 வயது இருக்கும்பொழுது. ஒரு ஆன்மீக வேட்கையினால் அவரது உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு கொந்தளிப்பு அவரை தெற்கே செல்ல தூண்டியது. அவர் புதுச்சேரியிலுள்ள ஸ்ரீ அரவிந்த ஆஸ்ரமம், திருவண்ணாமலையிலுள்ள ஸ்ரீ ரமணாசிரமம் மற்றும் காஞ்சங்காடு ஆனந்தாசிரமத்திற்கும் பயணித்தார். அவரது முதல் இரண்டு பயணங்கள் அவருக்கு பலன் அளிக்கவில்லை, அனால் மூன்றாவது விஜயம் வெற்றிகரமாகி, ஸ்ரீ ராமதாஸ் அவர்கள் அவருக்கு சன்னியாச தீக்ஷை அளித்து, ராமநாம ஜெபத்தை பிரச்சாரம் செய்யும் பணியை அவருக்கு வழங்கினார்.
அப்பொழுதும் ஒருவேளை ஸ்ரீ ராம்சுரத்குமார் அந்த பணியை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கவில்லை என தெரிகிறது. சுவாமிகள் சுற்றுப்பயணத்தில் வடநாட்டில் இருந்தபொழுது அவர் மீண்டும் ஸ்ரீ ராம்சுரத்குமாரிடம் அவரது சாதனையை துவங்கும்படி வற்புறுத்த நேரிட்டது. அந்த சிஷ்யன் இறுதியில் திருவண்ணாமலையில் தங்குவதென்று 1959-ல் முடிவெடுத்தார். அவர் நான்கு தசகங்கள், 2001 ஃபிப்ரவரி 20 அன்று, தனது 83-ம் வயதில் மஹாசமாதி அடையும்வரை, அங்குதான் இருந்தார் .
ஆரம்பகாலத்தில் அவரது திருவண்ணாமலை வாழ்க்கை மிக கடினமானதாகத்தான் இருந்தது. தனது நாட்களை ஒரு யாசகனாக கழித்த அவர், புனித தீபத்தின் புகழ்மிக்க மலையான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு உள்ளேயோ வெளியேயோ எங்காவது ஓரிடத்தில் படுத்து உறங்குவார். அந்த துறவி அவரது கையில் அவர் எப்பொழுதிடும் வைத்திருந்த பனையோலை விசிறி, மற்றும் உணவு அருந்துவதற்கும் நீர் பருகுவதற்கும் அவர் பயன்படுத்திய தேங்காயோட்டினால் அடையாளம் காணப்பட்டார். போகப்போக அவரது பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக துவங்கியது. அவரது தேவைகளுக்கு உதவவும் அவர் தங்குவதற்கு ஒரு இடம் ஏற்பாடு செய்யவும் அவர்கள் முன்வந்தனர். அவரைவிட வழக்கத்திற்கு மாறான ஒரு துறவியை அவர்கள் கண்டிருக்க இயலாது. அவர் சாதாரணமாக அழுக்கான, கந்தலடைந்த, ஆடைகளையே உடுத்தியிருந்தார். ஆன்மீக உரைகள் நிகழ்த்தமாட்டார். அற்புதச் செயல்கள் செய்ய மாட்டார். அவரது இயற்கையான பாணியில் அவர் வாழ்ந்துகொண்டிருந்த பொழுதும் ஒருவேளை அவருள் மறைந்து இருந்த ஒரு ஆன்மீக காந்த சக்தியால் மக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டனர்.
தனது பணியான ராமநாம பிரச்சாரத்தின் பொறுப்பை ஒப்படைக்க அவர் தேர்ந்தெடுத்த முதன்மையான சீடர் சாது பேராசிரியர் வே. ரங்கராஜன் ஆவர். அந்த ‘சிஷ்யர்’ (அந்த வார்த்தையை உபயோகப்படுத்தலாமாகில்– ஏனென்றால், அந்த துறவி தன்னை எப்பொழுதும் ஒரு பிச்சைக்காரன் என்றே கூறிவந்ததோடல்லாமல் தனக்கு சிஷ்யனாக யாரையும் குறிப்பிடவில்லையென்பதால்) முதன் முறையாக யோகியை 1984 செப்டம்பர் 1 அன்று சந்தித்தார். பின் வந்த ஆண்டுகளில் பலமுறை அவரை சந்தித்து, அவரை பற்றிய ஒரு சிறிய வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். இறுதியாக 1988 ஏப்ரல் 26 அன்று பகவானிடம் சந்நியாச தீக்ஷை, (அது சமய சம்பிரதாய முறையிலான முழு துறவு தீக்ஷையல்ல) ராமநாம தாரக மந்திரமாகிய ‘ஓம் ஸ்ரீ ராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்’ என்ற மந்திர தீக்ஷை, பெற்றார். காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தின் மாதாஜி கிருஷ்ணாபாய் துவக்கிய 15,500 கோடி நாம ஜெப யக்ஞத்தை முழுமையடைய செய்யும் பணியை மேற்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டார். குருநாதன் அவரிடம் கூறினார்: “நேற்றுவரை நீ உனது பணிகளை நீ செய்வதுபோல் நினைத்து செய்து வந்தாய். ஆனால் இன்றுமுதல் எனது தந்தை உன்மூலமாக வேலைசெய்யப்போகிறார்.”
சாதுவின் வாழ்க்கை அதன் பிறகு முன் போல் அல்ல என்பது ‘தரிசனங்களி’லிருந்து தெரிகிறது. சாதுவின் முந்திய வாழ்க்கை குறித்து இங்கு குறிப்பிடுவது பயனுள்ளதாகும். 1940 அக்டோபர் 22 அன்று ஏரணாகுளத்தில் பிறந்த இவர் பட்டப்படிப்பு முடித்தபின் சென்னைக்கு வந்தார் . அரசாங்க உத்தியோகமும் பெற்றார். அதை அவர் விட்டுவிட்டு சின்மய மிஷனிலும், பின்னர், 1925-ல் டாக்டர் கே.பி.ஹெட்கேவார் அவர்களால் துவங்கப்பட்டு அவருக்குப்பின் இரண்டாவது சர்சங்ச்சாலக் ஆக வந்த குருஜி எம்.எஸ். கோல்வால்கர் அவர்களின் ‘உணர்ச்சிமிக்க’ தலைமையின் கீழ், ஆர்.எஸ் எஸ்.-ஸின் சேவக் ஆக தொண்டாற்றினார். 37 வயதில், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பொழுதும், சென்னையிலுள்ள ஓர் கல்லூரியில் தத்துவ இயலில் பட்டமேற்படிப்பு தொடர்ந்தார். கல்வி பயின்ற காலத்தில் ஸ்வாமி சின்மயானந்தர் அவருக்கு நிதியுதவி வழங்கினார். சகோதரி நிவேதிதா அகாடமி என்ற பெயரில் ஓர் நிறுவனத்தை ஏற்படுத்தி பாரதத்தின் தேசபக்தர்கள், சுதந்திரப் போராட்டம், ஹிந்து தத்துவ சிந்தனை மற்றும் சமயம், மற்றும் மகான்கள் மற்றும் கவிஞர்கள் வாழ்க்கை வரலாறுகள், ஆகிய வற்றை வெளியிடும் பணியை மேற்கொண்டார். ஹிந்துஸ்தான் சமாச்சார் செய்தி நிறுவனம், ‘யுவ பாரதி’, ‘விவேகானந்தா கேந்திர பத்திரிகை’ மற்றும் ‘பிரம்மவாதின்’ ஆகியவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1984-ல் ‘தத்துவதர்சனா’ என்ற காலாண்டு இதழை துவங்கினார்.
சந்நியாச தீக்ஷை பெற்ற பின், ஜெப யக்ஞங்களில் ஈடுபட்ட காலத்தில் சாது ஒரு சிறந்த சொற்பொழிவாளராகவும் வளமிக்க எழுத்தாளராகவும் உருவெடுத்தார். தனது சமயப்பணிகளை பாரத்தத்திற்குள்ளும் வெளிநாடுகளிலும் அவர் ஆற்றி வருகிறார். அவர் பயணித்துள்ள வெளிநாடுகளில், தென்னாப்பிரிக்காவிற்கு அவர் பலமுறை சென்று பெரும் பணியாற்றியுள்ளார். மிகப்பெரிய தொகுப்பான ‘தரிசனங்கள்’, சாதுவின் திருவண்ணாமலை பயணங்கள், யோகியுடன் அவரது உரையாடல்கள், யோகிக்கு எழுதியுள்ள கடிதங்கள், குருநாதரின் ஜெயந்தி விழாக்கள், ‘தத்துவதரிசனா’ மற்றும் பல பத்திரிகைகளில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள், திருவண்ணாமலை நிகழ்வுகள் மற்றும் முன்னேற்றங்கள், அவரது குடும்பத்தில் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், ஆகிய அனைத்தும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளன. சாதுவின் எழுத்துக்கள் தங்குதடையற்ற சொல்லொழுக்குடையதாகும். நிகழ்வுகள் மற்றும் செய்திகள் பற்றிய அவரது விளக்கங்கள், சில சமயம் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ள பொழுதிலும், உள்ளத்தை இறுக்கப்பற்றுகின்றனவாகும். பாரதத்தின் மிகப்பெரிய மகான்கள், அவர்களில் எந்தவிதத்திலும் குறைவானவர் அல்லாத, வெளித்தோற்றத்திற்கு சாதாரணமானவர் ஆயினும் புண்ணிய பூமியின் ஒளிமிக்க மகான்களின் பாரம்பரியத்தின் உண்மையான பிரதிநிதியாக திகழும், யோகி ராம்சுரத்குமார் உட்பட , அனைவரின் ஊக்குவித்தலும் வழிகாட்டுதலும் பெற்ற ஒரு சிறந்த அறிவாளி-தேசபக்தர், மற்றும் நிறுவன அமைப்பாளர் ஒருவருடைய வாழ்க்கை மற்றும் சாதனைகளின் சிறந்த பதிவு இங்கே காண்கிறோம்.
[பவன்ஸ் ஜர்னல், ஜனவரி 15, 2019]
ஒரு மகா யோகியின் தரிசனங்கள் ( யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு
நினைவு தொகுப்பு ) நூல் ஆசிரியர் : சாது பேராசிரியர் வே. ரங்கராஜன் வெளியிடுவார்: சகோதரி நிவேதிதா அகாடமி, ஸ்ரீனிவாசநகர் , கிருஷ்ணராஜபுரம் , கிதகனூர் ரோடு, பெங்களூரு 560 036. ஆங்கில மூல நூல் :- விலை: ரூ 500/- U.S $ 25
திருவண்ணாமலையின் அருணாச்சல மலையின் மாபெரும் யோகி மற்றும் மெய்ஞானி ஆகிய யோகி ராம்சுரத்குமார் அவர்களுடைய வாழ்க்கை மற்றும் போதனைகள் விளக்கமாகவும் எளிமையாகவும் அவருடைய நூற்றாண்டு விழாவை யொட்டி வெளிவந்துள்ள இந்த பெரும் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளன .
யோகியின் தீவிர சிஷ்யராகிய ஆசிரியர் அவர்களுடைய முப்பது ஆண்டுகால குருவுடன் சந்திப்புகள், செயலாற்றல்கள், நிகழ்வுகள் மற்றும் அவருடன் நடத்திய உரையாடல்கள் உள்ளத்தை தொடும் வகையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. சாதுவின் பயணங்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களுடன் சந்திப்புகள் ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளன.
எல்லாவற்றிற்கும் மேலாக, தீவிர ஆன்மீக நாட்டமுள்ள ஒவ்வொருவரும் யோகியின் இந்த விரிவான வாழ்க்கை வரலாற்றை அவசியம் படிக்க வேண்டும்.
[ஈஸ்ட் வெஸ்ட் சீரீஸ், ஏப்ரல் 2020]