Sadhu’s Tamil Speech @ Yogi Ramsuratkumar Mantralayam Inauguration at Kanimadam

Work in Progress — Review pending.

பகவான்  யோகி ராம்சுரத்குமார்

சாது பேராசிரியர் வே. ரங்கராஜன்

பகவான்  யோகி ராம்சுரத்குமார் அவர்களிடம் தீட்சை பெற்ற சீடர் சாது பேராசிரியர் வே. ரங்கராஜன், பகவானின் உத்தரவை ஏற்று, கன்னியாகுமரி காணிமடத்தில் பகவான் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத் திறப்பு விழாவையொட்டி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு வேஙகடசாமி முன்னிலையில், 1993 ஆகஸ்டு 29, ஞாயிறு அன்று நிகழ்த்திய தலைமையுரை.

ஓம் வேத ரிஷய: ஸமாரப்ய வைதாந்தாசார்யா மத்யமாஈ

யோகி ராம்சுரத்குமார பர்யந்தம் வந்தே குருபரம்பராம்.

–வேத ரிஷிகளில் துவங்கி வேதாந்தாசர்யர்கள் வழி அடியெனுடைய தீட்சாகுரு யோகி ராம்சுரத்குமார் வரை பாரத தேசத்தில் அவதரித்துள்ள அனைத்து குருமார்களுக்கும் வந்தனம்.

மாண்பமிகு நீதிபதி அவர்களே, தாய்மார்களே, சகோதரர்களே ! இராமாயணத்தில் பகவான் இராமபிரான் கூறுகிறான்—“தேவா மானுஷ ரூபேண சரந்த்யேதே மஹீதலே”—கடவுளர்கள் மனித உருவில்தான் பூவுலகில் நடமாடுகிறார்கள்”.

இறை அனுபவம் என்பது இந்திரியங்களாலும் மனதாலும் உணர முடியாது. ஏயதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஈஏ—எங்கிருந்து வார்த்தைகள் திரும்புகின்றனவோ, எதை மனதால் அடைய முடியாதோ, அதுதான் பரம்பொருள். அந்த பரம்பொருள் மனித உரு எடுத்து நம்மிடையே இறங்கி வரும்.

ஏயதா யதாஹி தர்மஸ்ய க்ளானிர் பவதி பாரத,

அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹாம்,

பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்,

தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகேஏ

—“எப்பொழுதெல்லாம் தர்மம் மங்கி அதர்மம் தலை உயர்த்துகின்றதோ, அப்பொழுதெல்லாம் அதர்மத்தை வேரோடு பிழுதெரிய நான் எனக்கு உரு அளித்துக் கொள்கிறேன். சான்றோரை காக்கவும் தீயோரை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கின்றேன்.” பகவத்கீதையில் சொல்லியபடி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தேசத்திலும் பல பெயர்களிலும் உருவங்களிலும் அவன் அவதரிக்கின்றான். ஒரே உருவத்திலல்ல, பல உருவங்களில் அவன் அவதரித்துக்கொண்டிருக்கிறான்.

ஊலக நாடுகளிலேயே பாரதம் ஒரு தனிப்பெரும் சிறப்பை பெற்றிருக்கின்றது. வேறு எந்த நாட்டிலும் தோன்றாத அளவு, தொன்று தொட்டு—வேத காலம் முதல்–இன்றுவரை எண்ணற்ற மகான்களை–அவதாரங்களை—பெற்றெடுத்துள்ள ஒரே நாடு பாரதநாடு மட்டும்தான். இந்த நாடு பாரதம் என்று அழைக்கப்படுவதற்கு காரணம் அதுதான். பரதன் ஆண்டதனால் இந்த நாடு பாரதம் என்று அழைக்கப்பட்டது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் சுகுந்தலையின் மகன் பரதனுக்கு முன்னால் பல பரதர்கள் இருந்திருக்கிறார்கள். ஜட பரதர் இருந்திருக்கிறார். இராமாயண காலத்தில் இராமனின் தம்பி பரதன் இருந்திருக்கார். எத்தனையோ பரதர்கள் இருந்திருக்கின்றனர். பரதன் என்றால் நாட்டை ஆள்பவன் என்று பொருளுண்டு. ஆனால் இந்த நாட்டிற்கு பாரதம் என்ற பெயர் எப்படி வந்தது? ‘பா’ என்ற சமஸ்கிருத சொல்லிற்கு ‘ஒளி’—’ஞான ஒளி’–என்று பொருள். ‘ஞான ஒளியிலே திளைக்கின்ற நாடு’ என்று பொருள்படும் விதம் ‘பாரதம்’ என்ற பெயர் இந்த நாட்டிற்கு வழங்கப்பட்டது.

உலகின் பிற பகுதிகளில் மனித இனம் பண்பாடு அடையாமல் காடுகளிலும், குகைகளிலும் விலங்கினத்தைப்போல் வாழ்ந்துவந்த காலத்தில் பாரதத்தின் சிந்து, கங்கை போன்ற நதிகளின் கரைகளில் வாழ்ந்துவாந்த பெரும் ரிஷி முனிவர்கள் ஒரு மாபெரும் வேதப்பண்பாடையே ஊருவாக்கினர். இன்றைக்கு அந்த இடங்களில் அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சரித்திர ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பே அங்கு விஞ்ஞானத்தில் சிறந்த கலாச்சாரம் இருந்துள்ளதாகவும் வேத ரிஷிகள் விட்டுச்செனறுள்ள விஞ்ஞானக்கருத்துகள் இன்று விஞ்ஞானபூர்வமாக உண்மைகளென்று நிரூபணமாகியுள்ளனவென்றும் கூறுகின்றனர்.

பிரபஞ்சத்தோற்றத்தை ஏற்படுத்திய இறைவன் பிரபஞ்சத்தில் பல பல பொருட்கள் மற்றும் உயிரினங்களைப் படைத்தான். பரிணாம வளர்ச்சியில் ஓரறிவு படைத்த உயிரினம், ஈரறிவு படைத்த உயிரினம் என்று படிப் படியாக ஐந்தறிவு படைத்த விலங்கினம் மற்றும் ஆறறிவு படைத்த மனிதனையும் படைத்தான். இந்த படைப்புகள் ஏன் ஏற்ப்பட்டன, மனித இனத்தின் தோற்றத்திற்கான லட்சியம் என்ன என்பது பற்றி இன்று விஞ்ஞானபூர்வமாக ஆறாய்ச்சிகள் நடைபெருகின்றன.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பாரதவர்ஷத்தில் தோன்றிய மெய்ஞானிகள் ஆறாய்ச்சி செய்து நம் மனித வாழ்க்கையின் லட்சியம் மற்ற உயிரினஙகள் போல் பிறநது சில காலம் வாழ்நது பிறகு செததுமடிவதல்ல எனக் கூறியுள்ளனர். அண்மைக்காலத்தில் நம்மிடையே வாழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார், “எனக்கு முன்னே சித்தர்கள் பலர் தோன்றியுள்ளனர், நானும் வந்தேன் ஒரு சிததன்” என்று கூறி அத்தோடு நிற்காமல் மற்றொன்றையும் கூறினான், “மற்றவர்களைப் போல செத்து மடிவதற்காக நான் இந்த பூமியில் வரவில்லை. சாவற்ற வாழ்வு பெறுவதர்காகத்தான் நான் இந்த மண்ணுலகில் தோன்றியுள்ளேன்.” காலனுக்கே சவால் விட்டு அவன் முழங்கினான், “காலா! என்னருகில் வாடா! உன்னை என் காலால் எட்டி உதைப்பேன்.”

நாம் மனிதப்பிறவி எடுத்துள்ளது எதற்காக? மற்ற உயிரினங்கள, எத்தனையோ புழு, பூச்சி, செடிகொடிகள், மரங்கள், மிருகஙகள் போன்றவை தோன்ற,i ஏன் தோன்றினோம் என்பதறியாமலேயே மறைவது போல, பிறந்து, வாழ்ந்து பிறகு ஏன் பிறந்தோம் என்பதறியாமலேயே மடிவதற்கானதல்ல மானுட ஜன்மம். மனித வாழ்க்கைக்கு ஒரு உயர்ந்த லட்சியம் உண்டு, அதை ‘ஆத்ம சாக்ஷாத்காரம்’ என்று மெய்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

‘ஆத்ம சாக்ஷாத்காரம்’ என்பது ஏதோ அர்ததம் புரியாத சமஸ்கிருதச் சொல் அல்ல. ‘நான யார்?’ என்ற கேள்விக்கு விடை காண்பதுதான் ‘ஆத்ம சாக்ஷாத்காரம்’. நான் இந்த உடல் அல்ல, மனம் அல்லது புத்தியல்ல. நான் போய்விட்டால் இந்த உடல் தான் அழியும், எனக்கு அழிவில்லை. அந்த நான் தான் ஆத்மா. விழிப்பு நிலையில் இநத உடல் மற்றும் இந்திரியங்கள் மூலமாக உலகை உணர்கிறேன். உறக்க நிலையில் மனம் மூலமாக பல கனவுகளை காண்கிறேன். ஆழ்ந்த உறக்க நிலையில் ஆனந்தத்தை உணற்கிறேன். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு வந்த பின் நான் பரமானந்தமாக உறங்கினேன் என்று கூறுகின்ற பொழுது அதை அனுபவித்த நான் அந்த ஆழ்ந்த உறக்க நிலையிலும் விழிப்புடன் இருந்துள்ளது உறுதியாகிறது. அந்த ‘நான்’ யார் என்பதை உணர்ந்து கொள்வதுதான் மனித வாழ்ககையின் லட்சியம்.

இன்று உலகத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கூறுவது என்னவென்றால் நாம் காணும் இந்த உலகம் அனைத்தும் சித் சக்தி, அதாவது சிந்தனை அலைகளிலிருந்து தோன்றியதாகும். நான் எனப்படும் தன் உண்மை உணர்வு அந்த சித் சக்தியின் தோற்றம்தான். இந்த பேருண்மையை உணர்ந்து அந்த சித் சக்தியுடன் ஐக்கியமாவதுதான் வாழ்க்கையின் லட்சியம். அதற்காகத்தான் இந்த மானுடப் பிறவி ஏற்ப்பட்டுள்ளது.

கிரேக்க நாட்டு ஞானி சாக்ரட்டீஸ் ஒருநாள் பட்டப்பகலில் கையில் ஒரு லாந்தர் விளக்கை ஏந்தி சந்தை மற்றும் விளையாட்டு அரங்கம் போன்ற மக்கள் கூட்டமாக உள்ள இடங்களில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். வியப்புடன் அவரிடம் “எதைத் தேடுகிறீர்கள்?” என்று வினவிய மக்களிடம் அவர் பதிலுறைத்தார், “நான் மனிதனைத் தேடுகிறேன்”. அதாவது, நாம் இன்னும் மனிதர்கள் ஆகவில்லை. இரன்டு கைகளும் இரண்டு கால்களும் இருந்தால் மடடும் நாம் மனிதர்கள் ஆகிவிட முடியாது. எவனொருவன் வாழ்க்கையின் லட்சியம் என்னவென்பதை உணர்ந்து அதை அடைய  முயற்ச்சி செய்கிறானோ அவன்தான் மனிதன்.

புள்ளினங்கள், விலங்குகள் கூட உயிர் வாழ உணவு தேடுகின்றன, தங்குவதற்கு கூடு கட்டுகின்றன அல்லது இடம் அமைத்துக்கொள்கின்றன. இனப்பெருக்கம் செய்து கொள்கின்றன. அது அவைகளின் வாழ்ககை லட்சியம். ஆனால் மனித வாழ்க்கையின் லட்சியம் அதல்ல. கோடி கோடியாக பணம் சம்பாதித்தாலோ அல்லது ஏழடுக்கு மாடி கட்டிக்கொண்டாலோ ஒருவன் மனிதனாக வாழ முடியாது. ஒரு தூக்கணாங்குருவி கூட மரத்தில் தொங்கும் கூடு கட்டுகிறது. மனிதனால் அப்படி வீடு கட்ட முடியாது. செல்வம் தேடுவதோ வசதியாக உயிர்வாழ்வதோ மனித வாழ்க்கையின் லட்சியமல்ல. ஆறரிவு படைத்த மனிதன் தான் யார், எதற்காக இந்த பூமியில் பிறந்திருக்கிறோம் என்று ஆராய்ந்து மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த லட்சியமாகிய ஆத்மசாக்ஷாத்காரம் எனும் தன்னுண்மை உணர்வு பெறுவதாகும். அதற்கான வழியை இந்த பாரதமண்ணில் அவதரித்த வேத ரிஷிகள் மறறும் மகான்கள் நமக்கு காட்டியுள்ளனர். ஏமோக்ஷயதே ஸம்ஸாரஈஏ—ஏமுக்தியடைவதர்கே உலக வாழ்க்கைஏ—என்று அறிவுரை வழங்கிய அவர்கள் நமக்கு அளித்துள்ள வாழ்க்கை வழிமுறையே வேதப்பண்பாடு எனப்படும் ஹிந்து பண்பாடு. “நீங்கள் எல்லோரும் மற்ற உயிரினங்கள் போல் வாழ்ந்து மடியப் பிறக்கவில்லை. அமரவாழ்வு வாழவே பிறந்துள்ளிர்கள்” என்று கூறி அவர்கள் வழங்கிய வேதங்கள் மற்றும் உபனிடதங்களை பல்லாயிரம் ஆண்டுகளாக பாதுகாத்து நமமிடம் சேர்த்துள்ளவர்கள் நமது சமயப்பெரியார்கள், ஆசாரியர்கள் மற்றும் குருமார்கள்.

நமது பாரத பூமியின் புனிதத்துவம், மற்ற எந்த தேசத்திலும் காணக்கிடைக்காத பெருமை, இந்த நாட்டிண் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், ஒவ்வொரு காலத்திலும் ஏதாவது ஒரு மகான் தோன்றி, வாழ்ந்து, மக்களுக்கு வழிகாட்டி வந்துள்ளார்கள் என்பதாகும். இன்றும் எத்தனையோ மகான்கள் இம்மண்ணில் வாழ்நது வருகின்றனர். இன்று கன்னியாகுமரியில் நின்று நான் உரையாற்றுகிறேன். இங்குதான் நம்மிடையே கன்னியாகுமரி மாயம்மா இருந்துள்ளார்கள். சற்று தொலைவில் லட்சுமிபுரத்தில் ஒரு மாபெரும் சித்தர் குடிசை திண்ணயில் படுத்துக்கொண்டு இருக்கிறார். இன்னும் எத்தனை எத்தனையோ சித்தர்கள், மகான்கள், இருந்துள்ளனர், பாரதத்தின் பல பகுதிகளில் இன்றும் இருந்துகொண்டிருக்கின்றனர். இவர்களில் பலர் வெளித்தோற்றத்தில் பிச்சைக்காரனைப் போலவும் பைத்தியக்காரன் போலவும் காட்சியளிக்கின்றனர். இப்படி வாழ்ந்துகொண்டிருப்பவர்களை தேடி கண்டுபிடித்து தமது ஆசிரமத்திற்கு அழைத்துவந்து உபசரிக்கும் பணியில் மகிழ்வுகண்டவர் அவதார் மெஹுர்பாபா எனும் மகான்.

இத்தகைய பெரும் தவப்புதல்வர்களை பெற்றெடுத்த பாரத மண்ணில் இன்றும் தன்னை ஓரு பிச்சைக்கான், பயித்தியக்காரன் என்று கூறிக்கொள்ளும் ஒரு பெரிய மகான்  தவசீலர்களின் சிகரமாக நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டி வருகிரார். அவரே திருவண்ணாமலை தெய்வக்குழந்தை யோகி ராம்சுரத்குமார். இன்று அவருக்காக ஒரு மந்திராலயம் அமைத்து விழா கொண்டாடுகிறோம். ஆனால் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார். அங்கே திருவண்ணாமலையில் கோயிலுக்கு அருகேயுள்ள தேர்முட்டிக்கு எதிரேயுள்ள வீட்டுத் திண்ணையில் கையில் கொட்டாங்குச்சி மற்றும் விசறியேந்தி பரமானந்த நிலையில் தன் உலகத்திலே இருந்துகொண்டிருக்கிறார். தனக்கு என்று எதையும் எதிர்பார்க்காமல, தான் எனும் எண்ணத்தை முழுமையாக அழித்து, இறையுணர்விலே வாழ்ந்துவருகின்ற பெருமகனார் யோகி ராம்சுரத்குமார்.

அந்த மகான் யோகி ராம்சுரத்குமார் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? எனக்கு கோயில் கட்டுங்கள், ஆசிரமம் கட்டுஙகள் என்றெல்லாமா எதிர்பார்க்கிறார்? இங்கு யோகி ராம்சுரத்குமாரருக்காக இந்த மந்திராலயம் கட்டப்படவில்லை. யோகிராம்சுரத்குமாரரின் பக்தர்களுக்காக இந்த மந்திராலயம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த மகானுக்கு  ஆலயமோ ஆசிரமமோ தேவையில்லை. ஏன் என்றால் அவர் உடல் நிலையில் வாழ்கின்றவர் அல்ல. “துஹிஸ றுஙெஙார iஸ நஒத சஒந்iநடெ தஒ தஹிஸ றஒடய, தஹிஸ றுஙெஙார iஸ வெரெயஞஹுரெe” என்று எப்பொழுதும் கூறிக்கொண்டிருப்பவார். அந்த பேராற்றலுடன் எப்பொழுதும் ஐக்கியமாக வாழ்ந்துவரும் மகானுக்கு எதுவும் தேவையில்லை. ஆனால் அந்த மகானை அடைவதற்கு நம்போன்றவர்களால் எளிதில் முடியாது. நம்முடைய சிறிய அறிவிற்கு அந்த மகானை எட்ட முடியாது என்பதனால்தான் அவருக்காக ஓரு கோயில் எழுப்பி அங்கு அவருடைய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து அவர் நாமத்தைக் கூறி வழிபாடு செய்கிறோம். அது நம்முடைய தேவைக்காக செய்கிறோம். அத்தகைய பெரிய மகான் இன்று நம்மிடையில் வாழ்ந்து வருகிறார்.

ஆதி சங்கர பகவத்பாதர் “விவேக சூடாமணீ” எனும் வேதாந்தக் கவிதையில் கூறுகிறார்ஈ

த்ரயமேதத் துர்லபம் லோகே தெய்வானுக்ரஹு Eஹுதுகம்

மனுஷ்யத்வம் முமுக்ஷJத்வம் மஹாபுருஷ ஸம்ச்ரயம்

 

மூன்று விஷயங்கள் இவ்வுலகில் பெறுவது மிகவும் அரிதாநது. முதலாவது, மனிதப்பிறவி. புல்லாய் புழுவாய் பல கோடி பிறவிகள் எடுத்தபின் கிடைப்பது மானிடப்பிறவி. இரண்டாவதாக, அப்படியே மனிதப்பிறவி கிடைத்தாலும் சொத்து, சுகம், மனைவி, மக்கள், பாசம், பந்தம் என்று நாட்டம் கொண்டு விலங்கினங்கள் போல் உயிர்வாழ்ந்து வருகிறோம். வாழ்க்கையின் லட்சியம் என்ன என்பதை உணர்ந்து தன்னுண்மை உணர்வு எனும் அந்த உயர்ந்த லட்சியத்தை அடைவதற்கான நாட்டம் கோடியில் ஓருவற்குத்தான் ஏற்படுகிறது. மூன்றாவதாக, அப்படியே நாட்டம் ஏற்பட்டாலும் அதை அடைவதற்கு நமக்கு வழிகாட்டும் ஓரு மகானை சந்திப்பது அரிதிலும் அரிதானதாகும். அப்பேர்பட்ட ஓரு மகான் இன்று நமக்கு கிடைத்துள்ளார்.

 

பாரதநாட்டில் எத்தனையோ மகான்கள் எங்கெங்கெல்லாமோ பல பல நிலைகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் யோகி ராம்சுரத்குமார். இன்று ஆண்டிக் கோலத்தில் தன்னை ஓரு பிச்சைக்காரன், பைத்தியக்காரன் என்று கூறிக்கொண்டு திருவண்ணாமலையில் வாழ்ந்து வருகிறார், அந்த மகானுடைய வழிகாட்டுதலைப் பெற நாம் கோடி புண்ணியம் செய்திருக்கவேண்டும். இல்லாவிடில் இவ்வாறு நாம் இங்கு வந்திருக்கமுடியாது. எத்தனையோ புண்ணியம் செய்ததனால்தான் நாம் இங்கு அந்த மகானுக்கு வழிபாடு செலுத்த இந்த ஆலையம் அமைத்து இன்று விழா நடத்திக்கொண்டிருக்கிறோம்.

 

யோகி ராம்சுரத்குமாரருக்கு நாம் ஆற்றவேண்டிய தொண்டு என்ன? அவருக்கு சிலை வைப்பதினாலோ, விளம்பர அட்டைகள ஒட்டி ஊரெல்லாம் பிரச்சாரம் செய்வதாலோ நமது பணி முடியவில்லை. இதெல்லாம் அல்ல அவருக்கு வேண்டியது. அவர் எந்த ஒரு லட்சியத்திற்காக இந்த ஆண்டிக்கோலத்தில் அவதாரம் எடுத்து இன்று நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்காரோ அந்த லட்சியம் நிறைவேற நாம் வாழவேண்டும். இந்த ஆலயம் இங்கு அமைக்கப்டுவது இங்கு வருகின்றவர்கள் ஆத்மசாதனை செய்வதற்கு ஒரு சிறந்த இடமாக மாற வேண்டும என்பதற்காகத்தான்.

 

என்னுடைய சிக்ஷாகுருவாக இருந்தவர் அண்மையில் மகாசமாதி அடைந்த சுவாமி சின்மயானந்தர் ஆவார், இளவயதிலிருந்து அவரிடம் பயிற்ச்சி பெற்று வளர்ந்தவான். அவர் வளர்த்து யோகி ராமசுரத்குமாரிடம் ஒப்படைத்து, எனக்கு யோகி ராம்சுரத்குமார் தீட்சை அளித்து என் தீட்சாகுருவாகினார். என் சிக்ஷாகுரு சின்மயானந்தர் அடிக்கடி கூறுவார், “டீஉரஉ iஸ லிகe a நாபகிந.” குரு என்பவர் ஓரு கைக்குட்டை போன்றவர். கைக்குட்டையை உங்கள் முகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்துகிறீர்கள். அதுபோல் உங்களுடைய அஞ்ஞான அழுக்கையெல்லாம் நீக்கி உஙகளுக்கு ஆன்மீக உணர்வு ஏற்பட குருவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கைக்குட்டையை ஒரு பெட்டியில் வைத்து அதற்கு குங்குமப் பொட்டு வைத்து ஆரதி எடுப்பதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதுபோல் குருவிற்கு கோயில் கடடி கும்பிட்டால் மட்டும்  போதாது. நமது ஆனமீக முன்னேற்றத்திற்கு குருவை பயன்படுத்திக்கோள்ள வேண்டும்.

 

பகவானின் பணியில் வெளிவரும் “தத்துவ தரிசனம்” காலாண்டு சஞ்சிகையின் மே-ஜூலை 1993 இதழில் “துஹுe லுiவிநங டீஉரஉ” எனும் தலைப்பில் பகவானின் குருநாதர்  பூஜ்ய பப்பா ராமதாஸர் அவர்களின் அருள்வாக்கு வெளியட்டிருந்தோம். வழக்கம் போல் சஞ்சிகை இதழின் முதல் பிரதி பகவானுக்கு சமர்ப்பித்திருந்தோம். நேற்றைய முன்தினம் நான் பகவானை தரிசிக்க சென்றிருந்த பொழுது அந்த இதழை அப்பொழுதும் தன் தலைமாட்டில் தலையிணையின் கீழ் வைத்துக் கொண்டு அவரை தரிசிக்க வருபவர்களிடமெல்லாம் அந்த அருள்வாக்கை படிக்கச் சொல்லிககொண்டிருந்தார். அதில் பப்பா ராமதாஸர் என்ன கூறுகிறார்? குரு என்பவர் வெளியே இல்லை, நமக்குள்ளேதான் இருக்கிறார். வெளியே இருந்து மானிட வடிவில் நமக்கு வழிகாட்டும் குரு நமக்குள்ளே ஆன்மீக ஆற்றலாக இருக்கிறார். மகான்களிடம் அருளாசி பெருங்கள். ஆனால் நிரந்தரமாக அவரது நிழலைப் பற்றிக்கொண்டு அவரது ஆசிரமத்தில் வாழும் எண்ணம் கூடாது. தனிமையாக சுதந்திரமாக திறந்தவெளியில் வாழுங்கள். உங்களுக்குள் இருக்கும் குரு உங்களுக்கு வழிகாட்டுவார் என்று பப்பா கூறுகிறார். இந்த கோயில் நாம் பக்குவநிலை அடைய ஒரு கருவியாக இருக்கவெண்டும். அதல்லாது நமக்கு இதில் பற்றுதல் ஏற்படக் கூடாது.

 

இன்று இங்கு வந்திருப்போர் ஒரு விஷயத்தை நினைவில் இருத்த வேண்டும். யோகி ராம்சுரத்குமார் இன்று நம்மிடையே வாழ்ந்துகொண்டிருப்பது நம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாறுதல் ஏற்படுத்துவதற்காகத்தான் என்பதுதான் அது. யோகி ராம்சுரத்குமார் எப்பொழுதும் ஒரு ஹிந்தி பாட்டு பாடுவார்ஈ

 

யுக யுக ஸே ஆர்ஜித ராஷ்ட்ர தன் ஹே ராம நாம், ராம நாம்.

யுக யுக ஸே பூஜித தேச தன் ஹே க்ருஷ்ண நாம், க்ருஷ்ண நாம்.

யுக யுக ஸே ஸேவித ஜாதி தன் ஹே சிவ நாம், சிவ நாம்.

யுக யுக ஸே பூஜித ராஷ்ட்ர தன் ஹே ராமக்ருஷ்ணசிவ நாம், ராமக்ருஷ்ணசிவ நாம்.

 

யுகயுகமாக நாம் பெற்றெடுத்த ராஷ்ட்ரச் செல்வம் ராம நாமம். யுகயுகமாக நாம் போற்றி வந்துள்ள தேசத்தின் செல்வம் க்ருஷ்ண நாமம். யுகயுகமாக நாம் வழிபட்டு வந்துள்ள சமுதாயச் செல்வம் சிவ நாமம், யுகயுகமாக நாம் போற்றிப் புகழ்ந்து வந்துள்ள ராஷ்ட்ரத்தின் செல்வமே ராமக்ருஷ்ணசிவ நாமம். இந்த நாம ஜப வேள்வி நமது நாடடிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்கும் நன்மை பயக்க உலகெங்கும் இதை பரப்பவேண்டும் என்பதே அவரது லட்சியம். அதற்காக அவரது ஆணைப்படி அகில உலக ராமநாம இயக்கம் துவங்கப்பெற்று இன்று பல நாடுகளில் பரவி வருகிறது.

 

இந்த பாரத நாடு பெரும் மகான்களை பெற்றெடுத்துள்ளது. இந்த மண்ணில் பெரும் மகான்கள் தோன்றியுள்ளார்கள் — இந்த நாட்டின் நலனுக்காக மடடுமல்ல, உலகம் முழுவதும் உய்வதற்கான வழி காட்ட. இங்கே கன்னியாகுமரி கடற்கறையில் ஸ்ரீபாதப் பாறையில் அமர்ந்து மூன்று நாட்கள் தவம் புறிந்து பின் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று பாரதத்தின் ஆன்மீகப் பெருமையை உலகெல்லாம் நிலைநாட்டிவிட்டு வந்தார் சுவாமி விவேகானந்தர். அந்த துறவி வேந்தனுக்கு இன்று கன்னியாகுமரியில் மாபெரும் நினைவுச்சின்னம் எழுப்பியுள்ளோம். அதுபோல் இன்று பகவான் யோகி ராம்சுரத்குமாருக்காக இந்த குமரிமுனையில் இந்த மந்திராலயம் கட்டப்பட்டால்கூட அவரது பணி இன்று உலகெலாம் பரவிக்கொண்டிருக்கிறது.

 

நேற்றைய முன் தினம் பகவானிடம் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் கழகம் மேற்கொண்டுள்ள அகில உலக ராமநாம இயக்கத்தின் பணீ குறித்து உரையாடும்பொழுது பகவான் கண்ணீர்மல்கக் கூறினார், “Iத iஸ a ஙரeaத ஞஒரக, Iத iஸ a வரெய ஹுஒலய ஞஒரக. Iத iஸ முய டிaதஹுரெ கூaபா ருaமடாஸஎஸ ஞஒரக ஙிவநெ தஒ தஹிஸ றுஙெஙார” – “ராமநாமப் பிரச்சார வேலை மிக முக்கியமான வேலை, மிகப்புனிதமான பணி. என் தந்தை பப்பா ராமதாஸர் இந்த பிச்சைக்காரனுக்கு அளிததுள்ள வேலை.” இன்று உலகமெங்கும் இந்த ராமநாம இயக்கம் பரவிக்கொண்டிருக்கிறது, பகவானுடைய தீட்சா குரு—என்னுடைய பரம குரு—பப்பா ராமதாஸர் கேரள காஞ்சன்காட்டில் ஆனந்தாசிரமத்தில் ஸதாஸர்வகாலமும் ‘ஓம் ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்’ என்ற ராமநாம மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருப்பார். அவருக்குப் பின் அந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பூஜ்ய மாதாஜி க்ருஷ்ணாபாய் அவர்கள் 15,500 கோடி நாமஜபம் செய்ய ஒரு மகா யக்ஞத்தை துவக்கினார். அதுபற்றி நாளை மறுநாள் என்னுடைய சொற்பொழிவில் விளக்கமாக கூறுகிறேன். அந்த யக்ஞத்தை உலகம் முழுவதும் பரப்பும் பணியை இன்று திருவண்ணாமலையில் தேர்முட்டிக்கு முன்னால் உள்ள வீட்டுத் தண்ணையில் அமர்ந்து பகவான் யோகி ராம்சுரத்குமார் நடததிக்கொண்டிருக்கிறார். ஆப்பிரிக்கா, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனீ என்று உலக நாடுகளிலெல்லாம் இந்த இயக்கம் பரவி வருகிறது. இங்கு ஒன்றுசேற்ந்துள்ள நாம் எல்லாம் நினைவில் நிறுத்தவேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த ஒரு பெரிய லட்சியத்திற்காக அந்த மகான் வாழ்ந்துகொண்டிருக்கிறாரோ அந்த லட்சியம் பூர்த்தியடைய அனவரதம், வாழ்க்கையில் ஒவ்வொரு கணநேரமும, நாம் பணிபுரிய வேண்டும் என்பதுதான்.

 

தெய்வக்குழந்தை பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் சிறப்பை பற்றி பேசுவதற்காக நம்மிடையே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு வேங்கடசாமி அவர்கள் வந்துள்ளார். நீங்கள் அனைவரும் அவருடைய சொற்பொழிவை கேட்பதற்கு மிக ஆவலுடன் இருப்பீர்கள். உங்களுக்கும் அவருக்கும் இடையே நான் நிற்க விரும்பவில்லை. அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் மட்டும் கூற விரும்புகிறேன்.

 

அண்மையில் சென்னையில் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் கழகம் சுவாமி விவேகானந்தர் ஜயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் தலைமை தாங்க அவரை அழைத்தோம். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தும், குருநாதனின் பணிக்காக தான் எங்குவேண்டுமானாலும் வரத்தயாராக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் சந்துபொந்துவழியாக நடந்துவந்து இந்த சாதுவின் எளிய ஆசிரமத்திற்கும் விஜயம் செய்தார். எளிமையைக் கடைப்பிடித்து வாழ்வதுதான் ஆன்மீக வாழ்க்கைக்கு முதல் படி. அத்தகைய எளிமை மனோபாவம் படைத்த ஒரு பெரிய மனிதர், நமது குருநாதனின் சீறிய தொண்டர், இன்று நம்மிடையே சொற்பொழிவு  நிகழ்த்த இங்கு வந்துள்ளார். அவரது சிறந்த சொற்பொழிவு மூலம் குருநாதனுடைய பெருமையை உங்களுக்கெல்லாம் உணர்த்துவதற்கும் குருநாதனுடைய அருளாசிகள் உங்களுக்கெல்லாம் கிடைப்பதற்கும் குருநாதனை வேண்டிக்கொண்டு, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த அமைப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டும் விடைபெறுகிறேன். வந்தே மாதரம்!

 

* * *

 

னயோகி ராம்சுரத்குமார் மந்திராலயத் திறப்பு விழாவையொட்டி தொண்டர்கள் கூட்டத்தில் சாது பேராசிரியர் வே. ரங்கராஜன, 1993 ஆகஸ்டு 29, ஞாயிறு அன்று நிகழ்த்திய

உரை<.ண

 

ஓம் வேத ரிஷய: ஸமாரப்ய வைதாந்தாசார்யா மத்யமாஈ

யோகி ராம்சுரத்குமார பர்யந்தம் வந்தே குருபரம்பராம்.

 

–வேத ரிஷிகளில் துவங்கி வேதாந்தாசர்யர்கள் வழி அடியெனுடைய தீட்சாகுரு யோகி ராம்சுரத்குமார் வரை பாரத தேசத்தில் அவதரித்துள்ள அனைத்து குருமார்களுக்கும் வந்தனம்.

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹுஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே.

 

—  “ஸ்ரீராம ராம என்று ஜபம் செய்கையில் மனம் ராமனின் உணர்வில்         ஓன்றுபடுகிறது. ராமநாமம் இறைவனின் ஆயிரம் நாமங்களுக்கு ஒப்பானது.”

 

தாய்மார்களே, பெரியோர்களே! இன்று நமக்கெல்லாம் ஒரு மிகப் புனிதமான நாள். வேத ரிஷிகள் எந்த ஒரு பரம்பொருளை “வேதாஹுமேதம் புருஷம் மஹாந்தம்” — “இந்த மகாபுருஷனை உணருங்கள்”—என்று முழங்குகிறார்களோ, “யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஈ” –“ஏதொன்று வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதோ, மனதால் அடையமுடியாதோ”–அந்த பரம்பொருளிற்கு சிலை வடித்து அதை விக்ரஹுமாக மாற்றி அதற்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துகின்ற ஒரு பெரும் விழா இங்கு நடைபெற இருக்கின்றது. அந்த விழாவில் தொண்டு புரிய இங்கு கூடியுள்ளோம்.

யோகி ராம்சுரத்குமார் அடிக்கடி கூறுவார், “துஹிஸ றுஙெஙார iஸ நஒத சஒந்iநடெ தஒ தஹிஸ றஒடய. He iஸ வெரெயஞஹுரெe” — “இந்த பிச்சைக்காரன் இநத உடலுக்குள் கட்டுப்பட்டவனல்ல, இவன் எங்கும் இருக்கிறான்ஏ. அந்த பரம்பொருளுக்கு சிலை வடித்து கோயில் கட்டி நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடத்த இருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றோம். நாட்டின் பல கூகுதிகளிலிருந்து, குறிப்பாக தமிழகத்தின் பல மாவட்டஙகளிலிருந்து, பகவானின் பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலநதுகொள்ள வர இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தொண்டாகளுக்கு வழிகாட்ட இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓரு பேரறிஞர் ஒரு சிறந்த தலைவன் யார் என்று கூறுகின்ற பொழுது குறிப்பிடுகிறார், “ஞுஹுநெ a ஙரeaத  லeaடரெ aசசஒமபலிஸஹுஸெ a ஙரeaத தஹிநங, வெரெயறஒடய aஸஸஒசிaதடெ ஞிதஹு ஹிம ஞிலல பரஒஉடலய ஸாய தஹாத ஞe ஹாவe aசசஒமபலிஸஹுடெ iத!”—ஓரு சிறந்த தலைவன் ஒரு சிறப்பான காரியத்தை செய்து முடிக்கும் பொழுது அவனுடன் இருப்ப்வர்கள் நாங்கள் செய்தோம் என்று பெருமிதம் கொள்வார்கள். நான் செய்தேன் என்கிற எண்ணமில்லாமல் தன்னுடன் தொண்டாற்றியவர்கள் நாங்கள் செய்தோம் என்று பூரிப்படையும்படி செயலாற்றுபவன்தான் சிறந்த தலைவன். நாம் மேற்கொண்டுள்ள இந்த பணியில் பரிபூரண சமர்ப்பண மனோபாவத்துடன் நாம் செயலாற்ற வேண்டும்.

நாளையும் மறுதினமும் பகவானின் பல பக்தர்கள் இந்த விழிவில் பங்குகொள்ள இஙகு வந்து சேர இருக்கின்றனர். அவர்களுக்கான உணவு, தங்கும் வசதி, மற்ற வசதிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்யும் பணிகளை நாம் மேற்கொள்ள இருக்கின்றோம். நமது வீட்டில் திருமணம் போன்ற விழாக்கள் நடை பெறும்பொழுது எவ்வாறு நாம் பணிவுடன் விருநதினர்களை வரவேற்று உபசரிப்போமோ அதுபோல் இங்கு வருபவர்களை நாம் வரவேற்க வேண்டும்.

யோகி ராம்சுரத்குமாரருடைய குடும்பத்தில் ஓரு பெரிய விழா இங்கு நடக்க இருக்கிறது. நாமெல்லாம் இந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள். மேலும் பல புதிய பக்தர்கள் பகவானை பற்றி கேள்வியுற்று அவர் ஆசி பெற இங்கு வந்துசேர உள்ளார்கள், அவர்களுக்கெல்லாம் நாம் ஆற்றக்கூடிய தொண்டு பகவானுக்கு ஆறறுகின்ற தொண்டாகும். ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹும்ஸர் கூறுகிறார், “Sரெவe மாந, ஸரெவe டீஒட”—“மனிதனுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு ஆற்றும் தொண்டு.” அதற்கு உதாரணமாக வாழ்கின்றவர் பகவான் யோகி ராம்சுரத்குமார். ஓரு முறை அவரை தரிசிக்கவந்த பக்தர்கள் மழையில் நனைந்து ஈர உடையுடன் அவர் இருப்பிடத்திற்கு வந்தனர், அவர்களை மிக அக்கறையுடன் அருகிலிருந்த தன் பக்தரின் உணவு விடுதிக்கு அழைத்துச்சென்று அவாகளுக்கு உடைகள் மற்றும் உணவு ஏற்பாடு செய்தார் பகவான். ஆகையால், தன்னைக்காண திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு தொண்டனாக பணிபுரியும் பகவானுடைய தொண்டர்களாகிய நாம் அவரது பக்தர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று நான் விளக்கமாக கூறவேண்டியதில்லை.

ஏயத் கரோஷி யத் அச்னாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்.

யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்ப்பணம்.ஏ

 

— “நீ எதைச் செய்தாலும், எதை உட்கொன்டாலும், எந்த வேள்வி செய்தாலும் தானம் செய்தாலும் எந்த தவம் புரிந்தாலும் அதை எனக்கு சமாப்பித்துவிடு” என்று கண்ணபிரான் கீதையில் உறைக்கிறான். அதற்கேற்ப நாம் எந்த பணீ புரிந்தாலும் அதை நம் குருநாதர் யோகி ராம்சுரத்குமாரருக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். ஓரு வேளை சில விருந்தினாகள் வசதி சரியாக இல்லை, சாப்பாடு, காபி மற்றும் டிபன் போதவில்லை, என்று குறை கூறலாம். எந்த நிலையிலும் நாம் நமது கட்டுப்பாட்டை இழக்காமல் பணிவுடன் தொண்டாற்ற வேண்டும். சில சமயம் கூட்டத்திற்கு வருபவர் முந்தி அடித்துக்கொண்டு முன்னால் வர முயர்ச்சிப்பாற்கள். அது போன்ற நேரங்களில் நமது தொண்டர்கள் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். நம் வீட்டிற்கு வந்துள்ள விருந்தாளிகள்அவர்கள் என்கிற எண்ணத்தோடு அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும், ஒவ்வொரு இலாகாவிற்கும் ஒருத்தர் பொறுப்பாக இருப்பார். அவர் கீழ் பணியாற்றும் தொண்டர்கள் அவரது கட்டளைப்படி செயல் புரிய வேண்டும். அவர் கட்டளை நமக்கு ஏற்புடையதல்ல என்றால் அவர் சொல்படி நான் ஏன் பணீ புரிய வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயலாற்றக்கூடாது. நமக்கு இடப்படும் பணியை சிறிதும் சஞ்சலமில்லாமல் செய்ய வேண்டும்.

ஓரே ஒரு உணர்வுதான் நாம் அனைவருக்கும் இருக்கவேண்டியது. அதாவது, இந்த விழாவிற்கு வருகின்றவர்கள் அனைவருமே நம் குருநாதர் யோகி ராம்சுரத்குமாரருடைய பல்வேறு வடிவங்கள்தான் என்கிற எண்ணம். அந்த உணர்வுடன் நாம் செயல்பட்டால் குருநாதன் நம் உள்ளத்தில் இருந்து நமக்கு வழிகாட்டுவார். வேறெந்த வழிகாட்டுதலும் நமக்கு தேவையில்லை. குருநாதர் தான் இந்த விழாவை நடத்துகிறுர், நானல்ல, நீங்களல்ல, டாக்டர் ராதாகிருஷ்ணனல்ல, பொன் காமராஜ் அல்ல. குருநாதனின் கருவிகளாகத்தான் நாம அனைவரும் செயல்படுகிறோம் எனும் உணர்வுடன் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

இந்த விழா மிகச் சிறப்பாக நடை பெற்று, இங்கே வருபவர்களெல்லோரும் வாழ்க்கையில் ஓரு மிகப்புனிதமான நிகழ்ச்சியல் கலந்துகொண்டுள்ளோம் எனும் உணர்வில் பூரிப்படைந்து பெரு மகிழ்ச்சியுடன் தங்களது ஊர்களுக்கு திரும்பிச்செல்லும்படி செய்வதற்கு நம் தொண்டர்களின் உள்ளங்களிலிருந்து வழிகாட்ட குருநாதனை வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன். வந்தே மாதரம் !